'வட்டார மொழி கற்றேன்'

3 mins read
ba51fc63-ec2d-4423-9440-d32276b6bef6
-

சமூ­கத்­துக்கு நல்ல கருத்து­களைச் சொல்­லும் படைப்­பில் மீண்­டும் நடிப்­பது பெரும் மன­நி­றை­வைத் தரு­கிறது என்­கி­றார் இளம் நாயகி ஷ்ருதி ரெட்டி.

'மெரினா புரட்சி' படத்­தின் மூலம் ரசி­கர்­க­ளுக்கு அறி­மு­க­மான இவர், தற்­போது 'விசா­ர­ணைக் கைதி' என்ற படத்­தில் நடித்து வரு­கி­றார். இதில் நட்­ராஜ் எனப்­படும் நட்டிதான் நாய­கன்.

"கதைப்­படி, சமூ­கத்­துக்­கா­கப் போரா­டும் வழக்­க­றி­ஞர் தில­க­வதி என்ற பாத்­தி­ரத்­தில் தோன்­று­வேன். அர­சி­யல் தலை­வர் ஒரு­வர் திடீ­ரென இறந்து போகி­றார். மேலும் சில அரசி­யல் பிர­மு­கர்­க­ளின் உயி­ருக்­கும் ஆபத்து ஏற்­ப­டு­கிறது.

"இந்­தச் சம­யத்­தில் காவல்­துறை அதி­கா­ரி­யான நட்­ராஜ் (நட்டி) எந்­தக் குற்­ற­மும் செய்­யாத ஓர் அப்­பா­வியைக் கைது செய்ய, அந்த அப்­பா­வி­யைக் காப்­பாற்ற கள­மி­றங்­கு­வார் வழக்­கறிஞர் தில­க­வதி.

"என்­னு­டைய முந்­தைய பட­மான 'மெரினா புரட்சி' ஜல்­லிக்­கட்டை மையப்­ப­டுத்தி உரு­வா­னது. அது உணர்­வு­பூர்­வ­மான படம். நானும் அதில் இடம்­பெற்­றுள்­ளேன் என்­பதே மன­நி­றைவு அளித்­தது.

"இப்­போது 'விசா­ர­ணைக் கைதி' பட­மும் சமூ­கத்­துக்குத் தேவை­யான கருத்­து­களை முன்­வைத்து உரு­வாகிறது. இவ்­வாறு சமூ­கப் படைப்­பு­களில் நடிக்­கும் வாய்ப்­பு­கள் அதிக எண்­ணிக்­கை­யில் தேடி வரு­கின்­றன.

"இப்­ப­டிப்­பட்ட கதா­பாத்­தி­ரங்­களில் மட்­டுமே நடிப்­பேன் என்று நினைத்­து­விட வேண்­டாம். வணி­கப் படங்­களில் நடிக்­கும் ஆர்­வ­மும் உண்டு.

"அதே­ச­ம­யம் சமூ­கச் சிந்­த­னை­யுடன் நடப்பு அர­சி­யல் விவ­கா­ரங்­களை­யும் மையப்­ப­டுத்தி உரு­வா­கும் படங்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிப்­பேன்," என்று சொல்­லும் ஷ்ருதி ரெட்டி, பிர­பல இந்­திய நடி­கர் அனு­பம் கெர் நடத்­தும் நடிப்­புப் பயிற்சி கல்­லூரி­யில் பயிற்சி பெற்­ற­வர்.

மும்­பை­யில் பெற்ற நடிப்­புப் பயிற்சிக்­குப் பிறகு புது­வை­யில் உள்ள ஒரு நாட­கக்­கு­ழு­வில் இணைந்­துள்­ளார். சில நாட­கங்­களில் நடித்து முடித்த பிறகு திரை­யு­ல­கில் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கி­றார்.

"தமி­ழில் 'ஜெய்­ஹிந்த் 2' படத்­தில் சிறிய கதா­பாத்­தி­ரத்­தில் அறி­மு­க­மானேன். அப்­போது எனக்கு வயது 15. அதிக விவ­ரம் தெரி­யா­த­தால் முழு­மை­யாக ஈடு­பாடு காட்­ட­வில்லை.

"இப்­போது நான் ஓர­ளவு பக்­கு­வ­ம் அடைந்­தி­ருக்­கி­றேன். 'அண்­ண­னுக்கு ஜே' படத்­தின் இயக்­கு­நர் அடுத்­து­ இயக்க உள்ள படத்­தில் ஒப்­பந்­த­மாகி உள்­ளேன். இது நகைச்­சு­வைக்கு முக்கியத்­து­வம் அளிக்­கும் படம். விரை­வில் அறி­விப்பு வெளி­யா­கும்.

"இது­வரை எனக்­கான கதா­பாத்­தி­ரங்­களை தேர்வு செய்­வ­தற்கு நான் அதி­கம் மெனக்­கெட்­ட­தில்லை. ஆனால் இனி கன­மான, அழுத்­த­மான பாத்­தி­ரங்­களை ஏற்க விரும்­பு­கி­றேன்," என்­கி­றார் ஷ்ருதி ரெட்டி.

'விசா­ர­ணைக் கைதி' படத்­தில் தூத்துக்­குடி மாவட்­டத்­தைச் சேர்ந்த இளம்­பெண்­ணாக நடித்­தி­ருப்­ப­வர், வட்டார மொழி­யில் பேச பயிற்சி பெற்­றுள்­ளார்.

கிரா­மத்­துப் பெண்­ணாக எளி­மை­யை­யும் பணி­வை­யும் வெளிப்­ப­டுத்­தும் அதே­வே­ளை­யில் துணிச்­ச­லான இளம்­பெண்­ணா­க­வும் வலம் வருவாராம்.

"அநீ­தி­யைக் கண்­டால் பொங்கி எழும் பெண்­ணாக நடித்­தி­ருப்­பது மிகுந்த மன­நி­றைவை அளித்­துள்­ளது. தூத்­துக்­குடி கிராம மக்­களை அணு­கி நிறைய பேசி­னேன். ஏராள­மான தகவல்­க­ளை­யும் திரட்­டி­னேன்.

"வட்­டார மொழி­யில் பேசு­வது அவ்வளவு எளி­தல்ல. எனி­னும் என்­னால் இயன்ற வேகத்­தில் அந்­தப் பேச்சு வழக்கை கற்­றுக்­கொண்­டேன்.

"பின்னணிக் குரல் பதி­வின்­போது எனக்­கான வச­னங்­களை நானே பேச விரும்பு­கி­றேன்," என்­கி­றார் ஷ்ருதி ரெட்டி.

'விசா­ர­ணைக் கைதி' படத்­தில் இயக்கு­நர் பிரபு சால­மன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார். கதைப்­படி, அவ­ரும் வழக்­க­றி­ஞர் வேடத்தை ஏற்றுள்­ள­தா­கத் தக­வல்.

"நட்­ராஜ் போன்ற அனு­ப­வ­சா­லி­க­ளு­டன் இணைந்து நடிக்­கும் வாய்ப்பு எல்­லோ­ருக்­கும் கிடைத்­து­வி­டாது. இப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ள­ரான பிரபு, பல வெற்­றிப் படங்­க­ளைத் தயா­ரித்­த­வர். மேலும், இயக்­கு­நர் பிரபு சால­ம­னும் எங்­க­ளு­டன் இணைந்­தி­ருப்­பது பெரும் பலம்," என்­கி­றார் ஷ்ருதி ரெட்டி.

ஷ்ருதி ரெட்டி

, :

தமிழகத்  