கீர்த்தி சுரேஷ் அண்மையில் சமூக ஊடகத்தில் பகிர்ந்த புகைப்படம் குறித்து ரசிகர்கள் பரவலாகப் பேசி வருகிறார் கள். அதில் துபாய் தொழிலதி
பர் ஃபர்கான் பின் லியாக் வாத் என்பவருடன் காணப் படுகிறார் கீர்த்தி. இது போதாதா, இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் பரவியுள்ளது. இது குறித்து கீர்த்தி விளக்கம் அளித்துள்ளார். "ஹா ஹா இந்த புகைப்படத்தில் இருப்பவர் என்னுடைய நண்பர். எனது வருங்கால கணவர் அல்ல. என் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்ததும் வெளிப்படையாக தெரிவிப்பேன். அதுவரை அனைவரும் பொறுமையாக இருங்கள்," என்று கீர்த்தி தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுக்குப் பிடித்தமான கதைகளைத் தேர்வு செய்து நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா ராய்.
கான் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ள அவரிடம், 'இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதுதான் உங்கள் கொள்கையா' என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், இவ்வாறு கேட்பதையே பெரிய விருதாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். "திரைத்துறை என்பது நாள்தோறும் புதுமைகள் அறிமுகமாகும் துறை. ஒரு நடிகையாக இயக்குநர் மணிரத்னம் என்னை எப்போதும் ஊக்கப் படுத்துவார். 'உன்னால் இதைச் செய்ய முடியும்' என்று சொல்வார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்தபோது ஒரு மாணவியைப் போல் ஒவ்வொரு வசனத்தையும் எழுதி வைத்து, அர்த்தம் கற்றுக்கொண்டு நடித்தேன்," என்கிறார் ஐஸ்வர்யா ராய்.
தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க தமன்னா 5 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்ய தயங்குவ தாகவும் ஒரு தகவல் வெளி யாகி உள்ளது. ஆனால் இது பொய்யான தகவல் என்கிறார் தமன்னா. தமக்கு தெலுங்குப் பட வாய்ப்புகள் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக சிலர் இவ்வாறு தகவல் பரப்புவதாக தமன்னா கூறியுள்ளார்.

