விஜய் ஆண்டனி இயக்கி, நடித்திருக்கும் 'பிச்சைக்காரன் 2' படம் வெளியாகி மூன்று நாள்களுக்குள் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் 'பிச்சைக்காரன் 3'ஆம் பாகத்தை முற்றிலும் வித்தியாசமான கதையம்சத்தில் எடுக்கப்போவதாக அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.
இயக்குநர் நெல்சன் தற்பொழுது ரஜினியை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் 'கோலமாவு கோகிலா' படம் மூலம் அறிமுகமான இயக்குநர் நெல்சன்.
விஜய் நடித்துவரும் 'லியோ' படம் வெளியீட்டிற்கு முன்னதான வியாபாரத்தில் ரூ.400 கோடியைத் தாண்டியிருப்பதால், விஜய் தன்னுடைய 68வது படத்தில் நடிக்க தன்னுடைய சம்பளத்தை ரூ.200 கோடிக்கு உயர்த்தி இருக்கிறார். கதையை விட தனி ஒருவரின் மார்க்கெட்டுக்காக இவ்வளவு சம்பளம் கொடுக்கும்பட்சத்தில் தயாரிப்பு பணிகளில் அதிகளவு செலவிட முடியாமல் போகலாம் என்று தயாரிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

