``எனக்கு விரும்பியதைச் சொல்கிறேன், அதன் விளைவாக பணத்தை இழக்க நேரிட்டால், அது நடக்கட்டும்," என எலான் மஸ்க் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். அதை மேற்கோள் காட்டி தனது இன்ஸ்டகிராமில் ஒரு பதிவைப் போட்டு இருக்கிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்.
அதில் அரசியல்வாதிகளுக்கும் தேச விரோதிகளுக்கும் எதிராக நான் பேசியபோது ஒரே இரவில் நான் ஒப்பந்தமான 20 முதல் 25 கம்பெனிகள் என்னை ஒப்பந்தத்திலிருந்து நீக்கிவிட்டனர். இதனால் ஆண்டிற்கு எனக்கு ரூ.30 லிருந்து ரூ.40 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. ஆனால், நான் இப்போது சுதந்திரமாக இருக்கின்றேன். நான் விரும்பியதை கூற யாரும் தடுக்க முடியாது. மேலும் தனக்குப் பிடித்ததை செய்யும் எலான் மஸ்க்கை நான் பாராட்டுகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.

