அஜித், சில நாள்களுக்கு முன்னர், மகிழ் திருமேனியிடம் 'விடா முயற்சி'யின் முழுக்கதையையும் கேட்டிருக்கிறார். குடும்பத்தினரையும் திரையரங்குப் பக்கம் வர
வழைக்க சில மாற்றங்களைச் சொல்லி இருக்கிறார் நடிகர் அஜித். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயிடம் பேசி வந்தனர். ஆனால் தேதிகள் சரிப்பட்டு வராததால் தற்பொழுது திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கெனவே லைகா தயாரித்து இருந்த ராங்கி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் திரிஷா நடித்திருப்பதால் இந்த அருமையான வாய்ப்பு திரிஷாவிற்குப் போயிருக்கிறது. அநேகமாக ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

