கடந்த 2019ஆம் ஆண்டு 'கல்ப்' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகை டிம்பிள் ஹயாதி அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து 'கில்லாடி' 'ராமபாணம்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழில் 'வீரமே வாகை சூடும்' எனும் படத்தில் நடிகர் விஷாலுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் ஹைதராபாத் நகரில் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் செய்தியாளர்கள் காலனியில் வசிக்கிறார். துணை காவல் ஆணையாளர் ராகுல் ஹெக்டே என்பவரின் அரசுக்குச் சொந்தமான காரை தன்னுடைய வீட்டின் வெளியே நிறுத்தி
இருந்ததைப் பார்த்து கோபமடைந்தார்.
அதனால் கோபமடைந்த டிம்பிள் அந்தக் காரின்மீது அவரும் அவருடைய நண்பரும் சேர்ந்து தங்களுடைய காரை வைத்து இடித்து வண்டியைச் சேதப்படுத்தி இருக்கின்றனர். அதனைத்
தொடர்ந்து ஆணையாளர் ராகுல் புகார் அளித்தார்.
இதனிடையே காவல்துறையினர் 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு மேற்கொண்டதில் டிம்பிளும் அவரது நண்பரும் தங்களுடைய காரை வைத்து மோதியது தெரியவந்துள்ளது.
உள்நோக்கத்துடன் இச்சம்பவம் நடந்துள்ளது என்று புகாரில் அவர் குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார்.
அதனால் டிம்பிளுக்கு எதிராக குற்றவழக்கு பதிவாகியுள்ளது. இருப்பினும் காவல் உயரதிகாரி தனக்கு உள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்
படுத்துகிறார் என டிம்பிள் தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு சத்தியமே வெல்லும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.