குறட்டையால் பாதிக்கப்படும் கணவன், மனைவி உறவு

குறட்டை விடு­வதை மைய­மாக வைத்து ஒரு திரைப்­ப­டம் உரு­வாகி வரு­கிறது. படத்­துக்கு ‘டியர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

ஆனந்த் ரவிச்­சந்­தி­ரன் இயக்கு­கி­றார். இவர் இதற்­கு­முன் ‘செத்­தும் ஆயி­ரம் பொன்’ படத்தை இயக்­கி­ய­வர்.

ஜி.வி.பிர­கா­ஷும் ஐஸ்­வர்யா ராஜே­ஷும் இணைந்து நடிக்­கி­றார்­கள்.

“கொரோனா நெருக்­கடி காலத்­தில்­தான் இந்­தக் கதையை எழு­தி­னேன். அதற்­குக் கார­ணம் என் அம்மா. அவரும் தூக்­கத்­தில் பல­மாகக் குறட்டை விடு­வார்.

“பொது­வாக குறட்டை என்­றாலே ஆண்­கள்­தான் அவ்­வாறு செய்­வார்­கள் என்று நினைத்­து­விடு­கி­றோம். பெண்­களும் குறட்டை விடு­வார்­கள் என்­பது நமக்குத் தோன்­றாது.

“அதி­லும் அழ­கான பெண் குறட்டை விடு­வார் என்று சொன்­னால் அதை பலர் நம்­பக்­கூட மாட்­டார்­கள்.

“வீட்­டில் மனை­வியோ, தோழியோ குறட்டை விட்­டால், அது­கு­றித்து யாரி­ட­மும் வெளிப்­படை­யா­கப் பேசிக்­கொள்ள மாட்­டோம். இதை­யெல்­லாம் யோசித்த போது­தான் ‘டியர்’ படத்­தின் கதை உரு­வா­னது.

“அதற்­காகக் குறட்டை விடு­தலை மட்­டுமே இந்­தப் படம் அல­சாது. வேறு பல உணர்வு­பூர்­வ­மான அம்­சங்­க­ளை­யும் விவ­ரித்­துள்­ளோம்,” என்­கிறார் ஆனந்த் ரவிச்­சந்­தி­ரன்.

ஒரு கண­வன், மனைவிக்கு இடையே குறட்டை விடு­தல் கார­ண­மாக பிரச்­சினை ஏற்­ப­டு­கிறது. அதன் பின்­னர் நிக­ழும் சில சம்­ப­வங்­கள் அந்­தப் பிரச்­சினையை மேலும் பெரி­தாக்­கு­கிறது.

அந்­தச் சூழலை நினைக்­கும்­போது சிரிக்­கத் தோன்­றும் என்றாலும் அதன் பின்­ன­ணி­யில் உ­ணர்வு­பூர்­வ­மான பல அம்­சங்கள் உள்­ளன என்­கி­றார் இயக்­கு­நர்.

“குறட்­டையை வைத்து அரசி­யல்கூட பேச­லாம். ‘ஒரு­வ­ருக்­கொரு­வர் விட்­டுக்­கொ­டுத்­தல் என்­ப­து­தான் திரு­ம­ணம்.

“அந்த உற­வில் அனைத்­தும் நூறு விழுக்­காடு நேர்த்­தி­யாக இருக்­க­ வேண்­டும் என்­கிற எதிர்­பார்ப்பு கூடாது. இந்த அழ­கான அறி­வு­றுத்­தலை எனது படம் வழங்­கும்,” என்­கி­றார் ஆனந்த் ரவிச்­சந்­தி­ரன்.

இப்­ப­டத்­தின் நாய­கன் ஜி.வி.பிர­கா­ஷின் தந்­தை­யாக ‘தலை­வாசல்’ விஜய், தாயாக ரோகிணி நடித்­துள்­ள­னர். ஜிவி­யின் அண்ண­னாக காளி வெங்­கட்­­டும் அவ­ரது மனை­வி­யாக நந்­தி­னி­யும் நடிக்க, ஐஸ்­வர்­யா­வின் பெற்­றோ­ராக இள­வ­ரசு, கீதா கைலா­ச­மும் நடித்­துள்­ள­னர்.

“ஜி.வி.பிர­கா­ஷின் உழைப்பு வியக்க வைக்­கிறது. ஒரு பக்­கம் நடிப்பு, மற்­றொரு பக்­கம் இசை என்று அ­சத்­து­கி­றார். கடி­ன­மான காட்­சி­க­ளி­லும்­கூட ஒத்­திகை பார்க்­கா­மல் நடிக்­கும் திறமை அவ­ரி­டம் உள்­ளது.

“இந்­தப் படத்­தின் இசை­யமைப்­பா­ள­ரும் அவர்­தான். படத்­தில் ஏழு பாடல்­கள் உள்­ளன. இன்­னும் இரண்டு பாடல்­க­ளைப் பட­மாக்க வேண்­டி­யுள்­ளது. அதன் பிறகு படம் முடிந்­து­வி­டும். இளை­யர்­களைக் கவ­ரும் வகை­யில் இந்தப் படத்தை உரு­வாக்கி உள்­ளோம்.

“கேரள மாநி­லத்தின் இடுக்கி பகுதி­யில் படப்­பி­டிப்பு நடத்­தி­னோம். அங்கு அடிப்­படை வச­தி­கள்­கூட இல்லை.

“எனி­னும், அங்கு காட்­சி­களைப் பட­மாக்­கி­னால் மிக அழ­காக இருக்­கும் என்­றார் ஒளிப்­பதி­வா­ளர். ஜி.வி. பிர­காஷ் ஒப்­புக் ­கொள்­வாரா என்ற தயக்­கம் இருந்­தது.

“ஆனால் அவரோ எந்­த­வித வச­தி­யை­யும் செய்­து­த­ரக் கோராமல் சூழ்­நி­லை­யைப் புரிந்து­கொண்டு ஒத்­து­ழைத்­தார்.

“அவ­ரது அந்த எளி­மை­யும் தொழில் பக்­தி­யும் பாராட்­டுக்­கு­உரி­யவை,” என்­கி­றார் இயக்­கு­நர் ஆனந்த் ரவிச்­சந்­தி­ரன்.

 நடிகர் கார்த்தி நடித்துவரும் புதிய படம் ‘ஜப்பான்’. அவரது பிறந்தநாளை ஒட்டி, இப்படத்தின் வெளியீடு குறித்த முக்கியத் தகவலைப் படக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையின்போது இப்படம் வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது. எனினும், வெளியீட்டுத் தேதி பின்னர் தான் உறுதிசெய்யப்படுமாம்.

 முன்னாள் நடிகர் அப்பாஸ் பட வாய்ப்புகள் குறைந்துபோன தால் குடும்பத்துடன் நியூசி லாந்தில் குடியேறிவிட்டார். அங்கு வருமானத்துக்காக இரு சக்கர வாகனங்களில் பழுது நீக்கும் மெக்கானிக்காகப் பணியாற்றி வருகிறார். கடந்த 1996ஆம் ஆண்டு கதிரின் ‘காதல் தேசம்’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமான அப்பாஸ் ‘விஐபி’, ‘பூச்சூடவா’, ‘ஜாலி’, ‘ஹேராம்’ உள்ளி்ட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

 ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படம் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!