திரைத் துளி­கள்

 தெலுங்கு நடிகர் ஒருவர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தாம் ஒருபோதும் கூறவில்லை என நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளிவரும் இதுபோன்ற தகவல்களை ரசிகர்கள் நம்பிவிடக் கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, அந்தக் குறிப்பிட்ட தெலுங்கு நடிகர் தமக்கு தொலைபேசிவழி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக ஹன்சிகா ஒரு பேட்டியில் குறிப்பிட்டதாகத் தகவல் வெளியானது.

 இந்தியத் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் சார்பில் தங்க (கோல்டன்) விசா வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு கமல், விக்ரம், விஜய் சேதுபதி, மம்மூட்டி, மோகன் லால், திரிஷா, அமலாபால் உள்ளிட்ட பலருக்கும் இந்த விசா கிடைத்தது.

இந்நிலையில், பழம்பெரும் நடிகை லதாவுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. திரையுலகில் அவரது 50 ஆண்டு சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இந்த விசாவை வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 நடிகர் விஜய் தற்போது செயற்கை சிகையைப் (விக்) பயன்படுத்துவதாக மூத்த நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது விஜய் ரசிகர்களைக் கோபப்பட வைத்துள் ளது. அண்மைக் காலமாக விஜய் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்துகொண்டதைப் பார்த்தால் அவரின் தலைமுடி ‘விக்’ என்பது புரியும் என பயில்வான் ரங்கநாதன் கூறி உள்ளார். சமூக ஊடகங்களில் விஜய் ரசிகர்கள் அவரைப் பற்றி கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!