நல்ல முயற்சி: தம்பி கார்த்தியைப் பாராட்டிய அண்ணன் சூர்யா

கார்த்தி நடித்­துள்ள ‘ஜப்­பான்’ திரைப்­படத்­தின் குறு முன்­னோட்டக் காட்­சித் தொகுப்­புக்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

ட்ரீம் வாரி­யர் பிக்­சர்ஸ் தயா­ரிக்­கும் இந்­தப் படம் எதிர்­வ­ரும் தீபா­வளி பண்டிகை­யின்­போது வெளி­யீடு காணும் எனப் படக்­கு­ழு­வி­னர் அறி­வித்­துள்­ள­னர்.

ஜி.வி. பிர­காஷ் இசை­ய­மைக்க, ரவி­வர்­மன் ஒளிப்­ப­தி­வைக் கவ­னித்­துள்ளார்.

இந்­நி­லை­யில், குறு ­முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பைப் பார்த்த நடி­கர் சூர்யா, தனது தம்­பிக்­குப் பாராட்டு தெரி­வித்­துள்­ளார்.

“மிக வித்­தி­யா­ச­மான முயற்சி தம்பி,” என அவர் சமூக ஊட­கத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

‘ஜப்­பான்’ படத்­தில் கார்த்தி பல்­வேறு தோற்­றங்­களில் வலம் வரு­வார் என்று கூறப்­ப­டு­வ­தால் அவ­ரது ரசி­கர்­கள் மிகுந்த எதிர்­பார்ப்­பில் உள்­ள­னர்.

அவ­ருக்கு ஜோடி­யாக அனு இமா­னு­வேல் நடித்­துள்­ளார். மேலும் சுனில், விஜய் மில்­டன், வாகை சந்­தி­ர­சே­கர் உள்­ளிட்ட பலர் முக்­கிய பாத்­தி­ரத்­திரங்களில் நடித்­துள்­ள­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!