'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
சுமன்குமார் இயக்கும் இந்தப் படத்தில் தனக்கு அருமையான கதாபாத்திரம் அமைந்துள்ளதாகச் சொல்லும் கீர்த்தி, தமிழில் நடித்துள்ள 'மாமன்னன்' படம் தமக்கு கோடம்பாக்கத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புவதாகச் சொல்கிறார்.
"இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் சுமன்குமார். இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியீடு காணும்.
"எனது நடிப்பில் ஒன்றிரண்டு படங்கள் தோல்வி அடைந்ததும் என் கதை முடிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் விமர்சித்தனர். ஆனால் நானியுடன் நடித்த 'தசரா' படத்தின் வெற்றி, சிலர் போட்ட கணக்குகளை மாற்றிவிட்டது," என்கிறார் கீர்த்தி.
'ரகு தாத்தா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை படக்குழுவினர் கீர்த்தி சுரேஷுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மிக விரைவில் தொழில்நுட்பப் பணிகள் தொடங்கும் என்றும் படம் தரமான படைப்பாக உருவாகி உள்ளது என்றும் இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது.
நல்ல கதைகள் அமையும்போது கீர்த்தி தரப்பில் சம்பளம் குறித்து கறார் காட்டுவதில்லை எனத் தகவல்.

