சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜா இப்போது தன் மகன் மனோஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் (படம்) தொடங்கியுள்ளது.
'மார்கழி திங்கள்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். தந்தையைப் போலவே ஷியாம் செல்வன், ரஷானா ஆகிய இருவரையும் இந்தப் படத்தில் அறிமுகப்படுத்துகிறார் மனோஜ்.
"ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க, கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். அப்பாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம். என் மீதுள்ள நம்பிக்கையில் இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார். ஒரே கட்டமாக அனைத்து காட்சிகளையும் படமாக்கத் திட்டம்," என்கிறார் மனோஜ்.
இரு சாதிகளைச் சேர்ந்த காதலர்களை ஊரே திரண்டு எதிர்க்கிறது. அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாரதிராஜா, காதலர்களைச் சேர்த்து வைக்க என்ன செய்கிறார்? என்பதுதான் கதையாம்.

