அஞ்சலி நடிக்கும் 50வது படம்

அஞ்சலி நடிக்கும் 50வது படம்

1 mins read
eb2475ed-56ad-4d02-96d3-ea60fd296634
-

அஞ்­சலி திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி 17 ஆண்­டு­க­ளா­கி­விட்­டன. இந்­நி­லை­யில் அவர் நடிக்­கும் ஐம்­ப­தா­வது படம் மலை­யா­ளத்­தில் உரு­வா­கிறது.

ராம் இயக்­கத்­தில் 'கற்­றது தமிழ்' படம் மூலம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­னார் அஞ்­சலி. அதன் பிறகு 'அங்­கா­டித்­தெரு', 'எங்­கே­யும் எப்­போ­தும்', 'மங்காத்தா' உட்­பட ஏராளமான படங்­களில் நடித்­துள்­ளார்.

தற்­போது தெலுங்­கில் ராம் சரண் நடிப்­பில் சங்­கர் இயக்கி வரும் 'கேம் சேஞ்­சர்' படத்­தி­லும் முக்­கிய வேடத்­தில் நடித்து வரு­கி­றார் அஞ்­சலி.

"ஐம்­ப­தா­வது படத்­தில் நடிக்­கி­றேன் என்­பது எனக்கே வியப்­ப­ளிக்­கிறது. இரண்டு நிறு­வ­னங்­கள் இணைந்து இப்­ப­டத்தை தயா­ரிக்­கின்­றன.

"வித்­தி­யா­ச­மான கதைக்­களத்­தில் நடிப்­ப­தால் இந்­தப் படம் நிச்­ச­யம் வெற்­றி­பெ­றும் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் அஞ்­சலி.

இப்­போ­தெல்­லாம் தனது காதல், திரு­ம­ணம், எதிர்­கா­லத் திட்­டங்­கள் குறித்­தெல்­லாம் அஞ்­சலி வெளிப்­ப­டை­யா­கப் பேசு­வ­தில்லை.

செய்­தி­யா­ளர்­களோ, ரசி­கர்­களோ அவை குறித்து கேட்­கும் கேள்­வி­க­ளுக்­குப் பதில் அளிப்­பதை நாசூக்­கா­கத் தவிர்த்­து­விடுகி­றார்.

தற்­போது தனது முழுக் கவ­ன­மும் திரை­யு­ல­கில் மட்­டுமே குவிந்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் அஞ்­சலி.