'லியோ' படத்தில் விஜய்யுடன் நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது என்கிறார் இயக்குநர் மிஷ்கின். விஜய்யை வைத்து இந்தியாவில் உள்ள அனைத்து மொழி ரசிகர்களும் ரசிக்கக்கூடிய வகையில் படம் இயக்க விரும்புவதாகவும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கதை சொல்வதற்காக நான் எப்போது நேரம் ஒதுக்கக் கேட்டாலும் உடனே ஒப்புக்கொள்வார் விஜய். நான் சொல்லும் கதையைக் கேட்பதற்கும் அவர் தயாராக இருக்கிறார்.
"அப்படி நான் சொல்லும் கதை மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். அக்கதை விஜய்க்கு மட்டுமன்றி அவரது ரசிகர்களுக்கும் பிடித்தமானதாக இருக்கவேண்டும். இதையெல்லாம் மனதிற்கொண்டு கதையை உருவாக்கி வருகிறேன்," என்கிறார் மிஷ்கின்.
சில ஆண்டுகளுக்கு முன்பே மிஷ்கின் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சில காரணங்களால் சாத்தியமாகவில்லை.
நடிகர் விஜய், இயக்குநர் மிஷ்கின்.

