திரைத் துளி­கள்

2 mins read
c409ecca-064a-4bc1-aaad-6d0c58e0df16
-
multi-img1 of 2

 நிவேதா பெத்துராஜ்

உள்பட நான்கு நாயகிகள் நடிப்பில், 'ப்பூ' என்ற வித்தி யாசமான தலைப்பில்

உருவாகி உள்ள படம் 'ஓடிடி' தளத்தில் வெளியாகி உள்ளது. நிவேதாவுடன் ரகுல் ப்ரீத் சிங், மேகா ஆகாஷ், மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விஜய் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

"இது ஒரு பேய்ப் படம். திரையரங்கில் வெளியிடத்தான் திட்டமிட்டிருந்தோம். முதலில் தமிழ், தெலுங்கில் மட்டும் வெளியாகும் இப்படம், பின்னர் இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது.

 நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார் பாவனா. 'பிங்க் நோட்', 'கேஸ் ஆஃப் கொன்டனா' ஆகிய இரு கன்னட படங்களிலும் 'ஹன்ட்' என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரகுமானுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார். இதற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. "முதல் கட்டப் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி உள்ளது. இதில் ரகுமான் காவல்துறை அதிகாரியாகவும் நான் தடயவியல் மருத்துவராகவும் நடிக்கிறோம். அறிமுக இயக்குநர் என்றாலும் விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள் ளார் ரியாஸ் மாரத். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் வெளியாகும்," என்கிறார் பாவனா.

 மலையாள நடிகர் திலீப்புடன் புதுப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் ஐஸ்வர்யா.

 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. நிறைவு விழாவில் பங்கேற்று பாட உள்ளார் பாடகி ஜோனிதா காந்தி.

 'கான்' திரைப்பட விழாவில் தன் மனைவியுடன் பங்கேற்றுள்ளார் இயக்குநர் அட்லீ.

, : தமிழகத்  