சுதாகர்: நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்

சுதாகர்: நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்

1 mins read
07b6bdbd-f3b6-4d30-a9e0-a2ba7f0d4afe
-

தமது உடல்­ந­லன் குறித்தும் தாம் இறந்­து­விட்­ட­தா­க­வும் வெளி­யான தக­வல்­களை ரசி­கர்­கள் நம்ப வேண்­டாம் என மூத்த நடி­கர் சுதா­கர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

தாம் நல்ல உடல்நலத்­து­டன் மகிழ்ச்­சி­யாக இருப்­ப­தா­க­வும் அவர் சமூக ஊட­கப்­ப­தி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமி­ழில் 'கிழக்கே போகும் ரயில்' படம் மூலம் பிர­ப­ல­மான நடி­கர் சுதா­கர், தெலுங்­கி­லும் கதா­நா­ய­க­னாக நடித்து வெற்றி நடி­கராக வலம் வந்­தார். பின்­னர் குணச்­சித்­திர, வில்­லன் கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும் முத்­திரை பதித்­தார்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக அவரை தமிழ்ப் படங்­களில் பார்க்க முடி­ய­வில்லை.

இந்­நி­லை­யில் அவர் இறந்­து­விட்­ட­தாக வெளி­யான தக­வல் திரை­யு­ல­கத்­தி­னரை அதிர வைத்த நிலையில், அது பொய்த் தகவல் எனத் தெரிய வந்துள்ளது.