ராணுவ வீரர் வேடத்தில் சிவகார்த்திகேயன்

1 mins read
493151b5-06f6-4127-8c2a-9f69f4ea56ad
-

சிவ­கார்த்­தி­கே­யன் நடிப்­பில் உரு­வா­கி­யுள்ள 'மாவீ­ரன்', 'அய­லான்' ஆகிய திரைப்­ப­டங்­கள் ஜூலை, அக்­டோ­பர் மாதங்­களில் அடுத்­தடுத்து வெளி­யாக உள்­ளன.

அடுத்து ராஜ்­கு­மார் பெரி­ய­சாமி இயக்­கத்­தில், கமல் தயா­ரிக்­கும் படத்­தில் நடிக்­கி­றார் சிவா. இதில் முதன்­மு­றை­யாக ராணுவ வீரர் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றா­ராம். அது மட்­டு­மல்ல, அவ­ரது தோற்­றம் முற்­றி­லும் மாறு­பட்­ட­தாக இருக்­கும் என்­றும் தக­வல். அண்­மை­யில் இந்த வித்­தி­யா­ச­மான தோற்­றத்­தில் ரசிகை ஒரு­வ­ரு­டன் எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­டம் ஒன்று சமூக ஊட­கங்­களில் வெளி­யாகி இருந்தது.

அதில் தனது சிகை­ய­லங்­கா­ரம் வெளிப்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக தலை­யில் தொப்பி அணிந்­துள்­ளார் சிவா. மிக விரை­வில் புது சிகை­ய­லங்­கா­ரத்­து­டன் வலம் வரு­வா­ராம்.