விஜய்யுடன் மோத தயாராகும் தனுஷ்

விஜய்யுடன் மோத தயாராகும் தனுஷ்

2 mins read
1559bfcf-b47b-492a-aca2-ab769133e224
-

தனுஷ் தற்­பொ­ழுது நடித்து வரும் படம் 'கேப்­டன் மில்­லர்'. இந்­தப் படம் விஜய் நடிக்­கும் 'லியோ' படம் வெளி­யா­கும் நாளன்று வெளி­யா­கும் என்று அறி­வித்து கோலி­வுட்டை பர­ப­ரப்­பாக்கி இருக்­கிறார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்.

தமிழ் சினி­மா­வில் பிர­ப­ல­மான நடி­க­ராகத் திக­ழும் தனு­ஷின் நடிப்­பில் தற்­பொ­ழுது 'கேப்­டன் மில்­லர்' படம் உரு­வாகி வரு­கிறது. அருண் மாதேஸ்­வ­ரன் இயக்­கும் இதன் படப்­பி­டிப்பு கடந்த சில மாதங்­க­ளா­கவே விறு­வி­றுப்­பாக நடந்து வரு­கிறது. இந்­நி­லை­யில் இந்­தப்­

ப­டம் குறித்த பர­ப­ரப்­பான தக­வல் ஒன்று வெளி­யாகி வலைத்­த­ளத்தை அதிர விட்டு வரு­கிறது.

தமிழ் மட்­டு­மில்­லா­மல் பாலி­வுட், டோலி­வுட், ஹாலி­வுட் என பல மொழி­க­ளி­லும் வலம் வந்து கொண்­டி­ருக்­கி­றார் தனுஷ். இவர் நடிப்­பில் அண்­மை­யில் 'வாத்தி' படம் வெளி­யா­னது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி­களில் உரு­வான இந்­தப்

­ப­டத்­தில் பள்­ளிக்­கூட ஆசி­ரி­ய­ராக நடித்து மிரட்­டி­யி­ருந்­தார் தனுஷ். இந்­தப்­ப­டம் ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்­பினை பெற்­றது.

இத­னைத் தொடர்ந்து தற்­போது 'கேப்­டன் மில்­லர்' படத்­தில் நடித்து வரு­கி­றார் தனுஷ். ரத்­தம் தெறிக்க வெளி­யான 'ராக்கி', 'சாணிக்­கா­யி­தம்' படங்­களை இயக்­கி­ய­வர் அருண் மாதேஸ்­வ­ரன். ரத்­தக்­க­ள­ரி­யான படங்­களை இயக்கி ரசி­கர்­கள் மத்­தி­யில் கவ­னம் ஈர்த்த இவ­ரது இயக்­கத்­தில் தனுஷ் நடிப்­பது ரசி­கர்­கள் மத்­தி­யில் அதிகமான எதிர்­பார்ப்பைக் கிளப்­பி­யுள்­ளது.

1930 - 1940 கால­கட்­டங்­களில் நடக்­கும் சம்­ப­வங்­களை வைத்து 'கேப்­டன் மில்­லர்' படம் உரு­வாகி வரு­கிறது. இந்­தப் ­ப­டத்­தில் தனுஷ் ஜோடி­யாக பிரி­யங்கா அருள் மோகன் நடிக்­கி­றார்.

இவர்­க­ளு­டன் சந்­தீப் கிஷன், ஜான் கொக்­கன், நிவே­திதா சதீஷ் உள்­ளிட்­டோர் நடித்து வரு­கின்­ற­னர். மேலும், பிர­பல கன்­னட நடி­கர் சிவ­ராஜ்­கு­மார் இந்­தப் படத்­தில் முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். ஜி.வி. பிர­காஷ் குமார் இந்­தப் படத்­திற்கு இசை­ய­மைக்­கி­றார்.

இந்­நி­லை­யில் 'கேப்­டன் மில்­லர்' படம் குறித்து வெளி­யா­கி­யுள்ள அண்­மை­யச் செய்தி வலைத்­த­ளத்­தில் பரவி வரு­கிறது.

அதா­வது இந்­தப் படத்­தின் வெளி­யீடு குறித்து பேசி­யுள்ள தயா­ரிப்­பா­ளர், 'கேப்­டன் மில்­லர்' படத்தை விடு­முறை தினத்தைக் குறி வைத்து அக்­டோ­பர் மாதத்­தில் வெளி­யிட முடிவு செய்­துள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளார். விஜய்­யின் 'லியோ' பட­மும் அக்­டோ­பர் 19ஆம் தேதி வெளி­யா­க­வுள்­ளது.

அத­னால் 'லியோ', 'கேப்­டன் மில்­லர்' படங்­கள் ஒரே நாளில் வெளி­யா­குமா என்ற எதிர்­பார்ப்பு ரசி­கர்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது.

அவ்­வாறு வெளி­யா­னால் இரண்டு படங்­க­ளுக்­கும் இடையே மிகப்­பெ­ரிய போட்டி ஏற்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் மிகுந்த எதிர்­பார்ப்­புக்கு மத்­தி­யில் 'லியோ' படம் உரு­வாகி வரு­கிறது. செவன் ஸ்கி­ரீன் ஸ்டூடி­யோஸ் தயா­ரிப்­பில் பிரம்­மாண்­ட­மாக உரு­வாகி வரும் இந்­தப்

­ப­டத்­திற்கு அனி­ருத் இசை­ய­மைத்து

வரு­வது குறிப்­

பி­டத்­தக்­கது.