நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்திற்குப் பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தீர்த்தமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கோவில் பிரகாரத்தை விட்டு வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். அதனால் கீர்த்தி சுரேஷ் வெளியேற முடியாமல் திணறினார். உடனே பாதுகாப்பு ஊழியர்கள் கீர்த்தி சுரேஷை மீட்டு சுற்றுக்காவல் பணியில் இருக்கும் காரில் அவரை ஏற்றிச்சென்று அவர் இருக்கும் இடத்திற்குப் பாதுகாப்பாகக்கொண்டு சேர்த்தனர்.

