உச்சத்தில் இருக்கும் திரிஷா

2 mins read
678a5173-0304-46fb-909c-5552eebe3a88
-

'பொன்னியின் செல்வன் 2' படத்திற்குப் பின், உற்சாகத்தில் புன்னகைக்கிறார் திரிஷா. விஜய்யுடன் நடிக்கும் 'லியோ' படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் மறைந்த மனோபாலாவின் தயாரிப்பில் உருவான 'சதுரங்க வேட்டை 2' படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்தது. அதனை விரைவில் வெளியிடுவதற்கான வேலைகளில் மனோபாலாவின் நண்பர்கள் இறங்கியுள்ளனர். இந்தப் படத்தில் அரவிந்த்சாமியுடன் திரிஷா நடித்திருந்தார்.

திரிஷா 'மோகினி', 'நாயகி', 'கர்ஜனை', 'பரமபத விளையாட்டு', 'ராங்கி' என ஒரே சமயத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார். மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்புக்குப் பின்னர் மீண்டும் கதையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

'ராங்கி' படத்திற்குப் பின் 'தி ரோடு' என்ற நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அருண் இயக்கியுள்ள இப்படம் மதுரை திருமங்கலம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் 'த்ரிஷ்யம்' ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 'ராம்' என்ற படங்களில் நடித்து வருகிறார். இவற்றின் படப்பிடிப்பும் பெரும்பகுதி முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கில் சூர்யா வங்கலா இயக்கத்தில் திரிஷா முதன்முறையாக காவல் அதிகாரியாக 'பிருந்தா' என்ற இணையத்தொடரில் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. விரைவில் 'சோனி லைவ்' இணையத் தளத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.

தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் 'லியோ' படப்பிடிப்பு ஜூலையோடு நிறைவடைகிறது. இதற்கிடையே அஜித்தின் 'விடாமுயற்சி'யிலும் நடிக்க திரிஷாவிடம் பேசி வருகிறார்கள்.

மகிழ் திருமேனி கேட்கும் தேதிகள் சரிப்பட்டு வந்தால், இதிலும் இவர்தான் நாயகி. குந்தவைக்கு குவியும் வாய்ப்பைப் பார்த்து பலரும் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.

மே 26ஆம் தேதி­யன்று மூன்று தமிழ்ப் படங்­கள் வெளி­யாகி உள்­ளன. ஜெய், ஐஸ்­வர்யா ராஜேஷ் நடிப்­பில் உரு­வா­கி­யுள்ள திரைப்­ப­டம் 'தீராக் காதல்'. கல்­யா­ண­மாகி மனைவி, குழந்­தை­யு­டன் வாழும் நடி­கர் ஜெய், தனது முன்­னாள் காத­லி­யைச் சந்­திப்­ப­து­தான் இப்­ப­டத்­தின் கதைக்­க­ளம். காதல் திரைப்­ப­ட­மான இந்­தப் படம் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கி­யி­ருக்­கிறது.

சாதி­வெ­றிக்கு எதி­ரான பழி­வாங்­கும் பட­மாக வெளி­வந்­துள்­ளது 'கழு­வேத்தி மூர்க்­கன்'. அருள்­நிதி, துஷாரா விஜ­யன், சந்­தோஷ் பிர­தாப் உள்­ளிட்­டோர் நடித்­துள்­ள­னர்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், யோகி பாபு, மனோ­பாலா உள்­ளிட்­டோர் நடிப்­பில் உரு­வா­கி­யுள்ள திரைப்­ப­டம் 'காசே­தான் கட­வு­ளடா'. இப்பட­ம் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் இருந்து வருகிறது.