லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'. இந்தப் படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜூன் நடித்து வருகிறார். தான் மூத்த நடிகர், தான் சொல்வதை எல்லோரும் கேட்கவேண்டும் என்பதுபோல் மற்ற படப் பிடிப்புகளில் நடந்துகொள்வாராம் அர்ஜூன்.
அதுபோலவே 'லியோ' படப்பிடிப்புத் தளத்திலும் நடந்துகொண்டாராம். லோகேஷுக்கு சில அறிவுரை கூறலாம் என்று முயற்சித்தாராம். ஆனால் அவர் கொடுத்த அறிவுரையைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் தான் நினைத்தபடி படத்தை இயக்கிக் கொண்டு இருந்தாராம் லோகேஷ்.
தம்மை மதிக்கவில்லை என்பதை உணர்ந்த அர்ஜூன் தன்னுடைய காட்சிகளை முடித்துவிட்டு திரும்பி விடுவாராம். அர்ஜூன் படப்பிடிப்புத் தளத்தில் அமைதியாக இருப்பதைப் பார்த்து பலரும் வியந்து இருக்கின்றனர்.
விஜய் நல்லபடியாக இருந்து கொண்டு இருப்பார். திடீரென்று கோபம் வந்தால் பலரும் அரண்டு விடுவார்களாம். அதனால் அவரிடம் அர்ஜூன் நெருங்கவே இல்லையாம்.
தற்பொழுது சென்னையில் விஜய்-அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்திற்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171 படத்திலும் அர்ஜுன் வில்லனாக நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

