வெங்கட் பிரபு ரஜினிக்காக எழுதிய கதையில் சில மாற்றங்களைச் செய்து விஜய்யிடம் கூறியுள்ளார். விஜய்யும் கதை தனக்குப் பிடித்து இருப்பதாகக் கூற அடுத்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
'லியோ' படத்திற்குப் பிறகு விஜய் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வந்தன. மேலும் தயாரிப்பு நிறுவனத்தைச் சார்ந்தவர்களும் இந்தத்
தகவலைக் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து 'தளபதி 68' படத்தைப் பிரபல தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் இயக்கப்போகின்றார் என்றும் பேசப்பட்டது. மறுபக்கம் 'தளபதி 68' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் அப்படத்தை அட்லீ இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளி வந்தன.
இவ்வாறு 'தளபதி 68' படத்திற்காகக் கடுமையான போட்டிகள் நிலவி வந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக வெங்கட் பிரபுவை தன் அடுத்த பட இயக்குநராக ஒப்பந்தம் செய்திருக்கிறார் தளபதி விஜய்.
வெங்கட் பிரபு உண்மையில் இந்தக் கதையை நடிகர் ரஜினிக்காக எழுதியிருந்தார். ஆனால், அந்தப் படத்தில் அரசியல் வசனங்கள் அதிகம் இருந்ததால் ரஜினிகாந்த் தனக்கு அந்தக் கதை சரிவராது என்று கூறி மறுத்துவிட்டார்.
நடிகர் விஜய் அரசியலில் இறங்கும் நோக்கத்துடன் இருப்பதும் அவர் தன்னுடைய ரசிகர் மன்றத் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருவதும் பலரும் அறிந்ததே.
அதனால் அந்தக் கதையை விஜய்யிடம் சொன்னால் அவர் ஏற்றுக்கொள்வார் என்பதால் விஜய்யை அணுகினார். கதையைப் படித்த விஜய் மகிழ்ந்துபோய் தனக்குக் கதை பிடித்து இருப்
பதாகவும் இன்னும் சில மாற்றங்களைச் செய்யுமாறும் கூறியிருக்கிறார்.
அதனால் வெங்கட் பிரபு 'தளபதி 68' படத்தின் திரைக்கதையை மிகத் தீவிரமாக எழுதி வருகின்றார். மறுபக்கம் விஜய் 'லியோ' படத்தில் இடைவிடாது நடித்து வருகின்றார். எனவே 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய், வெங்கட் பிரபுவிடம் முழுக் கதையையும் கேட்பார் என்று கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 'தளபதி 68' படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகத் தெரிகின்றது. பூஜை முடிவடைந்த பிறகு ஜூலை மாதம் 'தளபதி 68' படத்தின் படப்
பிடிப்பைத் துவங்கி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது
மேலும் இப்படத்தை AGS நிறுவனம் தயாரிப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. அதைத்தொடர்ந்து விஜய் இப்படத்திற்காக ரூ.200 கோடி சம்பளமாக வாங்கியிருப்பதாகவும் செய்திகள் உலா வருகின்றன.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் 'லியோ' படத்தில் இடைவிடாது நடித்துக்கொண்டிருக்கிறார். எனவே 'லியோ' படம் முடிந்த பிறகே அவரின் அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதைப்போலத்தான் 'வாரிசு' படம் வெளியான பின்னர்தான் 'லியோ' படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் இம்முறை 'லியோ' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும்போதே 'தளபதி 68' படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் தளபதி. இது பலருக்கும் ஆச்சரியமான விஷயமாக இருக்கின்றது.
பலரும் விஜய்க்கு 'லியோ' படத்தின் மேல் இருக்கும் நம்பிக்கைதான் அப்படம் முடிவடையும் முன்னே அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட காரணமாக அமைந்தது என தங்கள் கருத்தைக் கூறி வருகின்றனர். என்ன இருந்தாலும் தளபதி ரசிகர்களுக்குத் தற்போது இரட்டிப்பு கொண்டாட்டமாகவே இருக்கின்றது.

