கமல்ஹாசன்: அடுத்த படம் நாயகன் படம்போல இருக்கும்

கமல்ஹாசன்: அடுத்த படம் நாயகன் படம்போல இருக்கும்

1 mins read
9a38b3b8-6c17-4dde-b448-3ce701e7d94d
-

கமல்­ஹா­சன் நடித்து வரும் 'இந்­தி­யன் 2' திரைப்­ப­டம் இறு­திக்­கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. இத­னை­ அடுத்து மணி­ரத்­னம் இயக்­கும் 'KH 234' படத்­தில் நடிக்­க­ இருக்கிறார் கமல்.

சென்ற ஆண்டு நவம்­ப­ரில் கமல் பிறந்­த­நாளை முன்­னிட்டு அவ­ரது 234வது படம் பற்­றிய அறி­விப்பு வெளி­யா­னது. அதன்­படி 'KH 234' படத்தை மணி­ரத்­னம் இயக்­கு­வது உறு­தி­யா­னது. ரெட் ஜெயன்ட், ராஜ்­க­மல் பிலிம்ஸ், மெட்­ராஸ் டாக்­கீஸ் இணைந்து தயா­ரிக்­கும் இந்­தப் படத்­திற்கு ஏ.ஆர்.ரஹ்­மான் இசை­ய­மைக்­க உள்­ளார்.

கமல் - மணி­ரத்­னம் கூட்­ட­ணி­யில் 1987ஆம் ஆண்டு வெளி­யானது 'நாய­கன்' படம். அந்தப் படம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதன்­பின்­னர் கமல் - மணி­ரத்­னம் கூட்­டணி இணை­யவே இல்லை.

சுமார் 37 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் இக்­கூட்­டணி மீண்­டும் இணை­வ­தால் ரசி­கர்­க­ளி­டம் மிகப் பெரிய எதிர்­பார்ப்பு காணப்­ப­டு­கிறது.

இந்­தச் சூழ­லில்­தான் 'KH 234' படம் பற்றி மனம் திறந்­துள்­ளார் கமல்­ஹா­சன். "நாங்­கள் 'KH 234' பட வேலையைத் தொடங்­கி­விட்­டோம். ஆனால் இந்­தப் படத்­திற்கு ரசி­கர்­க­ளி­டம் இருக்­கும் எதிர்­பார்ப்பு எங்­களை பதற்­ற­ம­டைய வைக்­கின்­றது. இருப்­பி­னும் நாங்­கள் அமை­தி­யாக இருக்­கி­றோம். 'KH 234' பட­மும் 'நாய­கன்' படத்தைப்போலத்தான் இருக்­கும்," என்று கூறியுள்ளார்.

இது கமல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.