'நான் பொறுப்புள்ள நடிகை'

'நான் பொறுப்புள்ள நடிகை'

3 mins read
dc82a46b-87bd-442c-b208-014d7d7f2144
-

திரைப்­ப­டத்­துறை என்­பது சமூ­கத்­தின் மீது பல்­வே­று­ வி­த­மான தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது என்­பதை உணர்ந்து தமக்­கான கதா­பாத்­தி­ரங்­க­ளைத் தேர்வு செய்­வ­தா­கச் சொல்­கி­றார் துஷாரா விஜய்.

'சார்­பட்டா பரம்­பரை', 'நட்­சத்­தி­ரம் நகர்­கிறது' உள்­ளிட்ட படங்­கள் மூலம் தமிழ் சினிமா ரசி­கர்­க­ளின் பார்­வை­யைத் தன் பக்­கம் திருப்­பி­யுள்ள இந்த இளம் நாயகி நடிப்்­பில் 'கழு­வேத்தி மூர்­கன்' படம் வெளி­யாகி உள்­ளது.

"நான் எப்­போ­துமே தர­மான கதா­பாத்­தி­ரங்­களில் மட்­டுமே நடிக்க விரும்­பு­கி­றேன். திரை­யு­ல­கம் அடித்­தட்டு மக்­கள் மத்­தி­யி­லும்­கூட பல்­வேறு தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தும் என்­பதை உணர்ந்­தி­ருக்­கி­றேன்.

"அந்த வகை­யில் ஒரு படத்­தில் நான் வெளிப்­ப­டுத்­தும் நடிப்­பும்­கூட சமூ­கத்­தில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என உறு­தி­யாக நம்­பு­கி­றேன்.

"எனவே நான் நடிக்­கும் படம், கதா­பாத்­தி­ரம் ஆகிய இரண்­டுமே மக்­க­ளுக்­குப் பய­ன­ளிப்­ப­தாக இருக்க வேண்­டும் என்­பதே எனது விருப்­பம்," என்­கி­றார் துஷாரா.

திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் உள்ள கன்­னி­யா­பு­ரம்­தான் இவ­ரது சொந்த ஊராம். அத­னால் மண்­சார்ந்த படைப்­பு­கள், வேடங்­களில் தம்­மால் சிறப்­பான நடிப்பை வெளிப்­ப­டுத்த இய­லும் என்­கி­றார்.

"நான் எத்­த­கைய சவா­லான கதா­பாத்­தி­ரத்­தி­லும் நடிக்கத் தயார். அதே­ச­ம­யம் பொறுப்­புள்ள நடிகை என்று பெய­ரெ­டுக்க விரும்­பு­கி­றேன்.

"இதற்கு முன்பு மாரி­யம்மா, ரெனி என நான் ஏற்று நடித்த இரண்டு கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­கும் ரசி­கர்­க­ளி­டம் உரிய அங்­கீ­கா­ரம் கிடைத்­தது. இப்­போது 'கழு­வேத்தி மூர்­கன்' படத்­தில் கவி­தா­வாக நடித்­துள்­ளேன்.

முந்­தைய படங்­களில் நடித்த கதா­பாத்­தி­ரங்­க­ளின் தாக்­கம் புது வேடத்­தில் இருக்­கக்­கூ­டாது என்­ப­தில் மிகுந்த கவ­னம் செலுத்­தி­னேன். உண்­மை­யில் இது­போன்ற விஷ­யங்­கள்­தான் ஒரு நடி­கைக்­குப் பெரும் சவா­லாக இருக்­கும்.

"ரசி­கர்­கள் 'இது நம்ம ஊர் பொண்ணு' என்று என்னை அடை­யா­ளம் காண வேண்­டும். அதையே எனக்­கான பெரிய வெற்­றி­யா­கக் கரு­து­கி­றேன்.

"எனது கிரா­மத்­தில் நான் சந்­திக்­கும் பெண்­க­ளி­டம் இருந்து நிறைய கற்­றுக்­கொள்­கி­றேன். அவர்­கள் பேசும் விதம், வேலை­க­ளைச் செய்­யும் விதம் என்று அனைத்­தை­யும் கவ­னிப்­பேன்.

"கவி­தா­வாக என்­னைத் திரை­யில் பார்க்­கும்­போது பல பெண்­க­ளால் தங்­களை என்­னு­டன் எளி­தில் பொருத்­திப் பார்க்க இய­லும். அது­மட்­டு­மல்ல, எனது நடிப்பு அவர்­கள் முகத்­தில் மெல்லிய புன்­ன­கை­யைக் கொண்டு வரும்," என்­கி­றார் துஷாரா விஜ­யன்.

விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய படங்­களில் மட்­டுமே நடித்­துள்ள போதி­லும், ரசி­கர்­க­ளின் வர­வேற்­பும் தன்­னி­டம் காட்­டும் பாச­மும் வியக்­க­வும் நெகி­ழ­வும் வைப்­ப­தா­கச் சொல்­ப­வர், நடிக்க வந்த புதி­தில் பெரும் சமுத்­தி­ரத்­தில் உள்ள சிறிய மீனைப்­போல் உணர்ந்­த­தா­கக் குறிப்­பி­டு­கி­றார்.

"தொடக்­கத்­தில் பல குழப்­பங்­கள் இருந்­தன. எந்­தத் திசை­யில் செல்­வது எனத் தெரி­யா­மல் விழித்­தேன். ஆனால் இப்­போது எல்­லாம் தெளி­வா­கி­விட்­டது.

"எனக்கு முன்­னாள் ஒரு விளக்­கின் வெளிச்­சம் இருப்­ப­தா­க­வும் அது என்னை வழி­ந­டத்­து­வ­தா­க­வும் தோன்­று­கிறது. எனி­னும் எனது கடந்த காலத்தை மறக்­கவே மாட்­டேன்.

"நான் இன்­னும்­கூட மற்­ற­வர்­க­ளைப் போன்ற சாதா­ரண பெண்­தான். நடி­கை­யா­கி­விட்­ட­தால் எனக்­கென தனி இடம் கிடைத்­து­விட்­ட­தாக நினைக்­க­வில்லை," என்று சொல்­லும் துஷாரா, மிகப்­பெ­ரிய படைப்­பு­களில் இடம்­பெ­று­வதை விரும்­பு­கி­றார்.

எனி­னும் முக்­கி­யத்­து­வம் உள்ள கதா­பாத்­தி­ரத்­தில் மட்­டுமே நடிப்­பா­ராம்.

ஒற்­றைக் காட்­சி­யில் வந்­தா­லும்­கூட ரசி­கர்­கள் தன்னை நினை­வில் வைத்­தி­ருக்­கும் வகை­யில் அந்­தக் காட்சி சிறப்­பா­ன­தாக இருக்க வேண்­டும் என்றும் இதில் சமரசத்துக்கு இடமில்லை என்றும் சொல்கிறார் துஷாரா.

துஷாரா விஜ­யன்

, :

தமி­ழ­கத்  