இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு 'ஹிப் ஹாப்' ஆதி நடிப்பில் உருவாகி வருகிறது 'வீரன்' திரைப்படம்.
இந்நிலையில் தாம் அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
"ஒரு படத்தில் ஒப்பந்தமான பிறகு அதில் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்காக நிறைய மெனக்கெடுவேன். இசையமைக்கும் வேலையும் இருக்கும்.
"இதற்கு முன்பு 'நட்பே துணை' படத்துக்காக சில விளையாட்டு நுணுக்கங்களைக் கற்றேன். வீரன் படத்துக்காக குதிரை ஏற்றத்துக்கான பயிற்சியில் ஈடுபட்டேன். இரண்டு ஆண்டுகளாக முனைவர் பட்டம் பெற அதிகம் படிக்க வேண்டியிருந்தது. எனவேதான் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை," என்கிறார் ஆதி.
தற்போது ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள வீரன் படம் உடலில் இருந்து மின் சக்தியை வெளிப்படுத்தும் மண் சார்ந்த 'சூப்பர்' நாயகன் கதையாம்.
"குலசாமிகள் எல்லாமே இதுபோன்ற கதாநாயகர்களாக இருந்தவர்கள்தான். அடிதடி, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ள படைப்பாக இப்படம் உருவாகிறது," என்கிறார் ஆதி.