நடிகர் ரிச்சர்டும் நடிகை யாஷிகாவும் காதலிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித்தின் மைத்துனரான ரிச்சர்ட் அண்மையில் வெளியீடு கண்ட திரெளபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் மீண்டும் புதுப்பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் யாஷிகாவும் அவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள ரிச்சர்ட், "சில இடங்களில் சூரியன் நம்மை முத்தமிடும்போது.." என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் காதல் விவகாரம் குறித்து இருவருமே இதுவரை வாய்திறக்கவில்லை.

