தாம் இயக்கிய 'குடைக்குள் மழை' என்ற படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க விரும்பியதாகவும் பிறகு அவர் வேண்டாம் என முடிவு செய்ததாகவும் நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவங்களையும்்்் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அந்தப் படத்தில் நடிக்க வைக்க அவரை ஒருநாள் காலை எட்டு மணிக்கு வரச் சொன்னேன். ஆனால், அன்று அவர் வரவில்லை.
"பிறகு தொலைபேசியில் தொடர்புகொண்டு 'சார் என்னால் நேற்று வர முடியவில்லை. இன்றுதான் பேருந்தில் சென்னைக்கு கிளம்புகிறேன். நாளை காலை கண்டிப்பாக வந்துவிடுகிறேன்' என சொன்னார்.
"கோபத்தில் இருந்த நான் 'இல்லை வரவேண்டாம்' என சொல்லிவிட்டேன். எனக்கு அப்படித்தான் கோபம் வரும். இப்போது அவர் 'லேடி சூப்பர் ஸ்டார்' ஆகிவிட்டார்," என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா இப்போது ஷாருக்கான் ஜோடியாக 'ஜவான்' படத்திலும், தமிழில் தனது 75ஆவது படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரைப் பற்றி இயக்குநர் பார்த்திபன் பேட்டியில் குறிப்பிட்டிருப்பது தமிழ்த் திரையுலகில் விவாதப் பொருளாகி உள்ளது.

