ரஜினிக்கு மகள் இவர்தான்

ரஜினிக்கு மகள் இவர்தான்

1 mins read
592af9e5-7bc0-47c2-8fa4-7b080b7a9080
-

சூப்­பர் ஸ்டார் ரஜி­னி­காந்த் நடித்து வரும் படம் 'ஜெயி­லர்'. இந்­தப் படத்தை 'சன் பிக்­சர்ஸ்' நிறு­வ­னம் தயா­ரிக்­, நெல்­சன் இயக்க, அனி­ருத் இசை­ய­மைக்­கி­றார். இந்­தப் படத்­தில் ரஜி­னிக்கு மக­ளாக இளம் நடிகை மிர்னா மேனன் நடிக்க ஒப்­பந்­தம் ஆகி­யி­ருக்­கி­றார்.

இந்­தப் படத்­தில் ஏற்­கெ­னவே ரஜி­னி­காந்­து­டன் ரம்யா கிருஷ்­ணன், விநா­ய­கன், யோகி பாபு உள்­பட ஒரு சிலர் நடித்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் இந்­தப் படத்­தில் இளம் நடிகை மிர்னா மேனன் என்­ப­வர் இணைந்து உள்­ள­தா­க­வும் இவர் ரஜி­னி­காந்­திற்கு மக­ளாக நடிக்க இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

'ஜீ5' தொலைக்­காட்­சி­யில் ஒளி­ப­ரப்­பாகி வரும் 'ஆனந்­தம்' என்ற தொலைக்­காட்­சித் தொட­ரில் இவர் நடித்­திருந்தார். அதன் பின்னர் 'சந்­த­னத்­தே­வன்' என்ற தமிழ்ப் படத்­தி­லும் 'பிக் பிர­தர்' என்ற மலை­யாள படத்­தி­லும் இவர் நடித்­தி­ருந்­தார். இவர் நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான 'புர்கா' படத்­தில் இவ­ரின் நடிப்­பைப் பல­ரும் பாராட்­டி­னர். மேலும் தெலுங்­கில் இவர் அல்­லரி நரே­ஷுக்கு ஜோடி­யாக கதா­நா­ய­கி­யாக நடித்­துள்ள 'உக்­ரம்' என்ற படமும் விரை­வில் வெளி­யாக இருக்­கிறது.

மேலும் இந்தப் படத்­தில் நடிக்­கும் மற்ற நட்­சத்­தி­ரங்­க­ளின் அறி­விப்பு அடுத்­த­டுத்து வெளி­யா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.