திரைத் துளி­கள்

3 mins read

 இந்தி நடிகை ஊர்வசி ரௌடேலா மும்பையில் ரூ.190 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கி உள்ளார் என்பதுதான் 'பாலிவுட்'டின் தற்போதைய பரபரப்புச் செய்தி. மும்பையின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டில் ஊர்வசி குடியேறி மூன்று மாதங்களாகிவிட்டன. எனினும் இப்போதுதான் அந்த வீட்டைப் பற்றிய தகவல்கள் மெல்ல கசியத் தொடங்கி உள்ளன. மொத்தம் நான்கு தளங்களைக் கொண்ட இந்த ஆடம்பர வீட்டில் நீச்சல் குளம், உடற்பயிற்சிக்கூடம், அழகியப் பூந்தோட்டம், சிறிய திரையரங்கம் என ஐந்து நட்சத்திர தங்கு விடுதிக்கு இணையான அனைத்து வசதிகளும் உள்ளனவாம். தற்போது 'தில் ஹை கிரே', 'பிளாக் ரோஸ்' ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வரும் ஊர்வசி, தமிழில் 'லெஜண்ட்' படத்தில் நாயகியாக நடித்தவர்.

 அதிக ஊதியம், விருதுகள் ஆகியவற்றைவிட ஒரு நடிகையாக ரசிகர்களின் அன்பைப் பெற வேண்டும் என்பதில்தான் தமது கவனம் குவிந்திருப்பதாகச் சொல்கிறார் ராஷி கண்ணா.

யாருடைய ஆதரவும்,சினிமா பின்னணியும் இல்லாமலேயே திரைப்படத் துறையில் தாம் அடியெடுத்து வைத்ததாகவும் கடும் உழைப்பால் நாயகியாக உயர்ந்துள்ளதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நமது திறமையை நாம் எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது எனது கருத்து. நிரந்தரம் இல்லாத சினிமாத்துறையில் கதாநாயகிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கற்பனை செய்ய இயலாது.

"கதாநாயகியாக நடிக்க மேலும் சில வாய்ப்புகள் கிடைத்தால் நல்ல நிலைக்கு செல்லலாம். இல்லையெனில் அறவே வாய்ப்புகள் இன்றிப் போகலாம். இங்கு எது வேண்டுமானாலும் நடக்கும்," என்கிறார் ராஷி கண்ணா.

 பிரபல சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நடிகருமான தீனாவின் திருமணம் திருவாரூரில் சிறப்பாக நடந்தேறியது. 'கைதி', 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தீனா தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் தனது சொந்த ஊரில் வீட்டைக் கட்டிய அவர், இப்போது மண வாழ்க்கையை தொடங்கி உள்ளார். இவரது திருமண வரவேற்பு ஜூன் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதில் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குடும்பத்தார் நிச்சயித்த திருமணம் என்றும் மணமகள் கணினி நிபுணர் என்றும் தீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகத்தினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது கால்ஷீட், சம்பளம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்.

 'அரண்மனை' படத்தின் நான்காம் பாகத்தில் நாயகனாக நடிக்கக் கேட்டு விஜய் சேதுபதியை அணுகினார் இயக்குநர் சுந்தர்.சி. ஆனால் அவர் கால்ஷீட் இல்லையென மறுத்துவிட்டதால் தானே நாயகனாக நடிக்க தீர்மானித்துள்ளார். இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் என்ற வளர்ந்து வரும் நடிகருக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகி உள்ளார்.

 'கடலோரக் கவிதைகள்' படத்தில் நாயகியாக நடித்த ரேகா, 20 ஆண்டு களுக்குப் பிறகு 'மிரியம்மா' என்ற படத்தில் கதை நாயகியாக நடிக்க உள்ளார்.

 ராமராஜன் நாயகனாக நடிக்கும் 'உத்தமன்' என்ற படத்தில் நடிகை மீனா நாயகியாக நடிப்பதாகத் தகவல்.

, : தமிழ­கத்  