சமந்தா: அன்புக்காக துணை நிற்பார் தெலுங்கு விஜய்

1 mins read
3e58e88a-3600-413b-8a95-0015f1e4dc87
-

தெலுங்­குப் படத்­துக்­கான படப்­பி­டிப்­புக்­காக நடி­கர் விஜய் தேவரகொண்­டா­வு­டன் துருக்கி நாட்­டுக்­குச் சென்­றுள்­ளார் சமந்தா. அங்கு படப்­பி­டிப்­புக்கு இடையே கிடைக்­கும் ஓய்வு நேரத்­தில் இரு­வ­ரும் வெளியே சுற்­றித் திரி­கி­றார்­க­ளாம்.

அப்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களை அவர் சமூக ஊட­கங்­களில் பகிர்ந்­துள்­ளார்.

அத்­த­கைய ஒரு பதி­வில், விஜய் தேவ­ர­கொண்­டாவை அவர் வெகு­வா­கப் பாராட்டி உள்­ளார்.

"நீங்­கள் பெற்­றுள்ள வெற்றி, தோல்வி இரண்­டை­யும் பார்த்­துள்­ளேன். உங்­க­ளு­டைய ஏற்ற இறக்­கங்­க­ளைக் கவ­னித்­துள்­ளேன்.

"சில நண்­பர்­கள் அன்­புக்­காக மட்­டுமே எப்­போ­தும் துணை நிற்­பார்­கள். அவர்­களில் நீங்­களும் ஒரு­வர்," என்று குறிப்­பிட்­டுள்­ளார் சமந்தா.

ஏற்­கெ­னவே இரு­வ­ரும் காதல் வயப்­பட்­டுள்­ள­தாகத் தகவல் பர­வி­யுள்ள நிலை­யில், சமந்­தா­வின் இந்­தப் பதிவு பரபரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.