'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைக் காட்சிகள் அனைவரையும் நிச்சயம் கவரும் என்கிறார் யோகி பாபு.
ஏற்கெனவே 'தர்பார்' படத்தில் இவர் ரஜினியுடன் நடித்துள்ளார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ரஜினியை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
"தன்னுடன் நடிக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கு முழுச் சுதந்திரம் அளிப்பார் ரஜினி. 'தர்பார்' படத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தோம். ஆனால் 'ஜெயிலர்' படத்தில் வித்தியாசமான நகைச்சுவைக் களத்தில் அசத்தி உள்ளோம்.
"ரஜினி சாரின் நகைச்சுவை உணர்வு அலாதியானது. அவருடன் இணைந்து நடிப்பது அருமையான அனுபவம்.
"எனக்கு அத்தகைய வாய்ப்பு அமைந்திருப்பதைப் பெரும் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்," என்கிறார் யோகிபாபு.