'உண்மை பேச விரும்புகிறேன்'

1 mins read
96e17c81-e7c3-466b-8906-c5d30baa399d
-

எப்­போ­தும் உண்­மையைப் பேச வேண்­டும் என்­பதே தமது கொள்கை என்­கி­றார் நடி­கர் சித்­தார்த்.

எனி­னும் அண்­மைக்­கா­ல­மாக சமூக பிரச்­சி­னை­கள் குறித்து தாம் அதி­கம் வாய் திறப்­பது இல்லை என்­கி­றார்.

"முன்­பெல்­லாம் சமூக விவ­கா­ரங்­கள் குறித்து வெளிப்­படை­யாக எனது கருத்­து­களை சமூக ஊட­கங்­களில் பதி­விட்­டேன். அப்­­போது எனக்­குப் பெரி­தாக ஆத­ரவு இல்லை. நான் மட்­டும் தனி­யாக பேசிக் கொண்­டி­ருந்­தேன்.

"யாரு­டைய ஆத­ர­வும் இல்­லா­மல், தனி­யாக அனைத்­தை­யும் சமாளிப்­ப­தற்கு நான் ஒன்­றும் 'சூப்­பர் நாய­கன்' கிடை­யாது. தனி­யாக நான் மட்­டும் இதில் பாதிக்­கப்­பட விரும்­ப­வில்லை," என்­கி­றார் சித்­தார்த்.

மேலும், தாம் சொல்­லும் கருத்­து­கள் தன்னை வைத்து படம் எடுப்­ப­வர்­க­ளின் நல­னை­யும் பாதித்­தது என்று குறிப்­பிடு­ப­வர், சமூக ஊட­கங்­களை விட்டு விலகி, தற்­போது தன் பணி­யில் மட்­டுமே கவ­னம் செலுத்தி வரு­வ­தா­கச் சொல்­கிறார்.

தமிழில் கடைசியாக 'டக்கர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அண்மையில் சமூக ஊடகம் வழி ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ஒரு ரசிகர், முன்பு போல் சமூக ஊடகங்களில் அதிக எண்ணிக்கையில் ஏன் பதிவிடுவதில்லை எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு விரிவாகப் பதிலளித்துள்ளார் சித்தார்த்.