மனதை வேதனைப்படுத்தக் கூடியவை அல்லது மனதுக்குப் பிடிக்காதவை என எதுவாக இருந்தாலும் முடிந்த அளவுக்கு அவற்றை விரைவாக மறந்துவிட வேண்டும் என்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
தாம் எப்போதுமே நேர்மையைக் கடைப்பிடிக்க விரும்புவதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எனக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால் அதை உடனடியாக வெளிப்படுத்திவிடுவேன். ஒருவரது முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து பேசும் துணிச்சல் எனக்கு உண்டு.
"வாழ்க்கைப் பயணம் என்பது குறுகிய காலத்தைக் கொண்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இந்த உலகத்தில் நாம் இருக்க மாட்டோம். அந்த நாள் எப்போது வரும் என்பதுகூட யாருக்கும் தெரியாது," என தத்துவார்த்தமாகப் பேசுகிறார் அபர்ணா.
வாழும் நாள்களில் தேவையற்ற நெருக்கடிக்குள் யாரும் சிக்கிவிடக்கூடாது என்று அறி வுறுத்துபவர், வேதனையை மனதில் அடைத்துக்கொண்டு மனித ஆற்றலை ஏன் வீணடிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்புகிறார்.
"கண்காணிப்புக் கருவிகளில் உள்ள காட்சிகள் ஒரு மாதத்திற் குப் பிறகு தன்னால் எப்படி அழிந்துவிடுமோ, அதேபோல் நம் மனதை வைத்துக்கொள்ள வேண்டும்," என்பதே அனுபமா வின் அறிவுரை.