சவாலை விரும்பும் சித்தி

சவாலை விரும்பும் சித்தி

3 mins read
df6a2726-a327-47ce-8234-2c70a232067e
-

அறி­மு­க­மான வேகத்­தில் தமிழ் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை தன் பக்­கம் திருப்பி உள்­ளார் சித்தி இட்­னானி.

'வெந்து தணிந்­தது காடு', 'தி கேரளா ஸ்டோரி', 'காதர் பாட்சா என்ற முத்­து­ரா­ம­லிங்­கம்' என இவர் அடுத்­த­டுத்து நடித்த படங்­கள் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளன.

தன் நடிப்பை ஏற்­றுக்­கொண்ட ரசி­கர்­க­ளுக்­கும் குறிப்­பிட்ட கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு தாம் பொருத்­த­மாக இருப்­ப­தாக கருதி வாய்ப்­ப­ளித்த இயக்­கு­நர்­க­ளுக்­கும் நன்றி தெரி­விப்­ப­தாக குறிப்­பி­டும் சித்தி இட்­னானி, திரை­யில் பேருக்கு வந்து போகும் கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­ப­தில் தமக்கு விருப்­பம் இல்லை என்­கி­றார்.

"வணி­கப் படங்­களில் சில ஆடல், பாடல் காட்­சி­க­ளி­லும் காதல் காட்­சி­க­ளி­லும் மட்­டுமே வந்து போவ­தற்கு நான் தேவை­யில்லை. அதற்கு முன்­வ­ரும் நாய­கி­களை ஒப்­பந்­தம் செய்­து­கொள்­ள­லாம்.

"என்­னால் சிறப்­பாக நடிக்க முடி­யும் எனக் கரு­தும் கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும் சவா­லான வேடங்­க­ளி­லும் நடிப்­ப­தையே விரும்­பு­கி­றேன்," என்­கி­றார் சித்தி இட்­னானி.

தற்­போது தனது திற­மைக்­கேற்ற கதா­பாத்­தி­ரங்­கள் தொடர்ந்து அமை­வது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அண்­மைக்­கா­லங்­களில் அனைத்து மொழி­க­ளி­லும் கதா­நா­ய­கி­க­ளைப் பயன்­ப­டுத்­தும் விதம் மாறி வரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

"கதா­நா­ய­கி­க­ளுக்கு ஓர­ளவு சுதந்­தி­ரம் அளிக்­கப்­ப­டு­கிறது. எனவே, தங்­க­ளுக்­கான கதா­பாத்­தி­ரங்­களை எவ்­வாறு வெளிப்­ப­டுத்­து­வது என்­பது குறித்து கதா­நா­ய­கி­களும் கருத்து தெரி­விக்க முடி­கிறது. அவற்றை சில இயக்­கு­நர்­கள் ஏற்­றுக்­கொள்­வ­தும் நல்ல மாற்­றம் என்­பேன்," என்­கி­றார் சித்தி இட்­னானி.

இவர் மும்­பை­யில் பிறந்து வளர்ந்த மராத்தி பெண் ஆவார். தமிழ் தெரி­யாத போதி­லும் 'வெந்து தணிந்­தது காடு' படத்­தில் இவரை ஒப்­பந்­தம் செய்­தார் இயக்­கு­நர் கௌதம் மேனன்.

எனி­னும், கடும் பயிற்சி மேற்­கொண்டு அறி­மு­கப் படத்­தி­லேயே சொந்­தக் குர­லில் வச­னங்­கள் பேசி நடித்­துள்­ளார்.

"இன்­ன­மும் கூட தமி­ழில் தெளி­வா­கப் பேச பயிற்சி மேற்­கொண்டு வரு­கி­றேன். எனது கதா­பாத்­தி­ரத்­துக்கு நானே பின்­னணி பேசி­னால்­தான் பொருத்­த­மாக இருக்­கும் என்று கௌதம் மேனன் கூறி­னார்.

"எனக்­கும் அது­தான் சரி எனத் தோன்­றி­யது. எனி­னும், 'காதர் பாட்ஷா' படத்­தில் வட்­டார மொழி­யில் பேச வேண்­டி­யி­ருந்­தது.

"அந்த அள­வுக்கு தமிழ் தெரி­யாது என்­ப­தால் எனக்­காக வேறொ­ரு­வர் பின்­ன­ணிக் குரல் கொடுத்­துள்­ளார். அடுத்­த­டுத்த படங்­களில் திண­றா­மல் தமிழ் பேசு­வேன் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் சித்தி இட்­னானி.

அண்­மைய படத்­தில் எனது கதா­பாத்­தி­ரத்­துக்­காக பாவாடை தாவணி அணிந்து நடித்­தது மிகுந்த மன­நி­றைவை அளித்­துள்­ள­தாக குறிப்­பி­டு­ப­வர், மண் வாச­னை­யு­டன் கூடிய கதா­பாத்­தி­ரங்­களில் ரசித்து, அனு­ப­வித்து நடிக்க முடி­யும் என்­கி­றார்.

'தி கேரளா ஸ்டோரி' படம் சர்ச்­சைக்­குள்­ளா­கும் என்று தெரிந்­து­தான் அதில் நடித்­தா­ராம்.

"அந்­தக் கதையை கேட்­ட­போதே, வழக்­க­மாக சினிமா ரசி­கர்­கள் ரசித்து, விரும்­பிப் பார்க்­கும்­ப­டி­யான வணி­கப் படம் அல்ல என்­பது புரிந்­தது. நிச்­ச­ய­மாக எதிர்­வி­னை­கள் இருக்­கும் என்­ப­தை­யும் உணர்ந்­தேன்.

"என்­னைப் போலவே அந்­தப் படத்­தில் நடித்த மற்­ற­வர்­க­ளுக்­கும் இத்­த­கைய புரி­தல் இருந்­தது என்றே நினைக்­கி­றேன்.

"அனைத்­தை­யும் கடந்து அப்­ப­டத்­தின் மையக்­க­ருத்து என்­பது சரி­யான பார்­வை­யா­ளர்­க­ளைச் சென்­ற­டைந்­தால், அது சில­ருக்கு உத­வி­னால், அதில் நாங்­கள் உழைத்­த­தற்­கான பலன் கிடைக்­கும் என நம்­பி­னேன்.

"இந்த அடிப்­ப­டை­யில் எனக்­கான கதா­பாத்­தி­ரத்­தில் துணிச்­ச­லாக நடித்து முடித்­தேன். இதனால் சில விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றாலும் நான் விரும்பியபடி சவாலான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

"தொடர்ந்து வித்­தி­யா­ச­மான வேடங்­களில் நடிக்க முடி­யும் என்ற நம்­பிக்கை மன­தில் நிறைந்­துள்­ளது," என்று சித்தி இட்னானி உறுதியாகச் சொல்கிறார்.

, :

தமி­ழ­கத்  