தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையில் நின்று ஆடை மாற்றிய மீனா

1 mins read
76339bc8-008c-4c0a-bcad-cfa62dfdf122
-

தன்­னோடு 16 வய­தி­லேயே ஜோடி­யாக நடித்த மீனா பற்றி பல சுவா­ர­சி­ய­மான தக­வல்­களை நடி­கர் ராஜ்­கி­ரண் கூறி இருக்­கி­றார். 'என் ராசா­வின் மன­சிலே' திரைப்­ப­டத்­தில் நடிக்­கும்­போது ஒரு பாடல் காட்­சிக்­காக நடிகை மீனா ரோட்டு ஓரத்­தில் நின்று உடை மாற்­றி­ய­தாக அவர் கூறி­யி­ருக்­கி­றார்.

1990களில் ரசி­கர்­க­ளின் கனவுக் கன்னியாக விளங்கியவர் மீனா.

கஸ்­தூரி ராஜாவின் இயக்கத் தில் 1991ல் வெளி­யான 'என் ராசா­வின் மன­சிலே' படத்தின் மூலம் தமிழ் சினி­மா­வில் நாயகியாக அறி­முகமானார். அப்போது இவருக்கு 16 வயது தானாம்.

அண்­மை­யில் நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொண்ட ராஜ்­கி­ரண் மீனா குறித்த பல விஷ­யங்­களைப் பகிர்ந்­துள்­ளார். "படத்­தில் மட்­டும்­தான் மீனா என்னைப் பார்த்து பயந்­ததாக எல்­லா­ரும் நினைத்தார்கள். ஆனால், நேரிலும் மீனா என்னைப் பார்த்து ரொம்­பவே பயந்­தார்கள். படப்­பி­டிப்பு தொடங்­கியது முதல் அவர் என்­னிடம் பேசவே இல்லை.

அது­போல் நடிப்பென்று வந்துவிட் டால் அது எந்தச் சூழலாக இருந்­தா­லும் நடிக்கத் தயா­ரா­கி விடுவார். இப்போது மாதிரி முன்பெல்லாம் 'கேர­வன்' போன்ற வண்­டி­கள் எல்­லாம் கிடை­யாது. ஒரு­முறை பாடல் காட்­சிக்­காக வேக­மாக ஆடை மாற்றவேண்டியது இருந்தது. உடனே மீனா சாலையோரமாக காரை நிறுத்தி அதன் மறை­வில் நின்று ஆடையை மாற்றி வந்தார். இப்போது உள்ள நடி­கை­க­ளி­டம் அதை­யெல்­லாம் எதிர்­பார்க்க முடி­யாது. அந்த அளவுக்கு நடிப்­பிற்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்த வர் மீனா எனப் பெரு­மை­யாகப் பேசியிருக்கிறார் ராஜ்­கி­ரண்.