ரஜினிகாந்த் அண்மையில் தமக்கு சிறப்புப் பரிசு ஒன்றை அளித்ததாக பார்ப்பவர்களிடம் எல்லாம் பூரிப்புடன் சொல்கிறார் தமன்னா.
வேறு ஒன்றுமில்லை, சில நாள்களுக்கு முன்பு 'ஜெயிலர்' படப்பிடிப்பில் பங்கேற்றபோது, தமக்கு குறுகியகால ஓய்வு கிடைத்திருப்பதாக ரஜினியிடம் கூறினாராம்.
அதைக்கேட்ட ரஜினி, உட னடியாக தன்னிடம் இருந்த ஆன்மீக நூலை எடுத்துக் கொடுத்தாராம்.
"அது ஆன்மீகப் பயணத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கும் அற்புதமான நூல். அதை தனது பரிசாகக் கருதுமாறு ரஜினி கூறினார். எனக்கு இதுவரை கிடைத்துள்ள பரிசுகளில் அந்நூல் ஆகச்சிறந்தது," என்கிறார் தமன்னா.
நல்ல தகவல்களைக் கொண்ட அந்த ஆன்மீக நூலை பத்திரமாக பாதுகாக்கப் போவதாக அவர் கூறியுள்ளார். ரஜினிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

