இரண்டு அறிவிப்புகளுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

1 mins read
312b4a36-fd7f-4840-ae48-ffdc7436836c
-

விஜய்­யின் பிறந்­த­நா­ளை­யொட்டி இரண்டு முக்­கிய அறி­விப்­பு­கள் வெளி­யா­கும் என ரசி­கர்­கள் மத்­தி­யில் எதிர்­பார்ப்பு நில­வு­கிறது.

ஜூன் 22ஆம்­ தேதி விஜய்­யின் 49வது பிறந்­த­நாள் ஆகும்.

அன்­றைய தினம் லோகேஷ் கன­க­ராஜ் இயக்­கத்­தில் அவர் தற்­போது நடித்து வரும் 'லியோ' படத்­தின் அறி­மு­கக் காணொ­ளியை அப்­ப­டக்­குழு வெளி­யி­டப் போவ­தா­க­வும் நடி­கர் கமல்­ஹாசன் அதை வெளி­யி­டு­வார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இந்தக் காணொளி சுமார் ஒன்றரை நிமிடங்கள் நீடிக்கும் எனத் தெரிகிறது.

மேலும், விஜய் நடிக்­கும் 68வது படத்­தின் தலைப்­புச் சுவ­ரொட்­டி­யும் வெளி­யாக உள்­ள­தாகத் தக­வல்.

இப்­ப­டத்தை வெங்­கட் பிரபு இயக்­கு­கி­றார். படத்­துக்கு 'சிஎஸ்கே' என்று தலைப்பு வைக்க இருப்­ப­தாக அண்­மை­யில் தக­வல் வெளி­யா­னது.

அது உண்­மையா என்­பது சில தினங்­களில் தெரி­ய­வ­ரும் என்­பதால் விஜய் ரசி­கர்­கள் ஆவ­லு­டன் காத்­திருக்கிறார்கள்.