'இது கிராமத்து கிரிக்கெட்'

2 mins read
778aa8d3-5151-4357-b2ad-8379cc0a0853
-

கடந்த சில ஆண்­டு­களில் விளை­யாட்­டுப்போட்­டி­களை மைய­மாக வைத்து உரு­வா­கும் தமிழ்ப் படங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

அந்த வகை­யில் கிரிக்­கெட் விளை­யாட்டை மைய­மாக வைத்து உரு­வாகி உள்­ளது 'ப்ளூ ஸ்டார்' திரைப்­ப­டம்.

அசோக் செல்­வன், சாந்­தனு பாக்­ய­ராஜ், பிருத்வி என படத்­தில் மூன்று கதா­நா­ய­கர்்­கள் உள்­ள­னர். அறி­முக இயக்­கு­நர் ச.ஜெயக்­கு­மார் இயக்­கத்­தில் உரு­வாகி உள்­ளது இப்­ப­டம். இவர் பா.ரஞ்­சித்­தி­டம் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர்.

"என் படத்­தின் கதா­நா­ய­கர்­கள் மூவ­ருமே நிஜத்­தி­லும் அரு­மை­யான கிரிக்­கெட் வீரர்­கள். அத­னால் ஒவ்­வொரு காட்­சி­யி­லும் இயல்­பாக நடித்­துள்­ள­னர்.

"எனி­னும் படப்­பி­டிப்­புக்­குக் கிளம்­பும் முன்­னர் ஏறக்­கு­றைய மூன்று மாதங்­க­ளுக்கு மூவ­ரும் சிறப்­புப் பயிற்சி மேற்­கொண்­ட­னர். குறு­கிய கால ஒத்­தி­கை­யும் தேவைப்­பட்­டது.

"அசோக் செல்­வன் அரு­மை­யான சுழற்­பந்து வீச்­சா­ளர். ஆனால் 'விக்­கெட் கீப்­பிங்' தெரி­யாது என்­றார். அத­னால் அவ­ருக்­குப் பயிற்சி தேவைப்­பட்­டது.

"அதே­போல் பிருத்­வி­ரா­ஜுக்கு மட்­டை­ய­டி­யில் பல நுணுக்­கங்­கள் தெரி­யும் என்­றா­லும் பந்­து­வீச்­சில் அவ­ருக்கு ஆர்­வ­மில்லை. அத­னால் அவ­ருக்கு பந்து வீச்­சில் பயிற்சி தேவைப்­பட்­டது.

"சாந்­த­னுக்கு கிரிக்­கெட்­டில் அனைத்­தும் அத்­துப்­படி என்­றா­லும் அவ­ரும் பயிற்சி மேற்­கொண்­டார்," என்று தனது கதா­நா­ய­கர்­க­ளைப் பாராட்­டு­கி­றார் இயக்­கு­நர் ஜெயக்­கு­மார்.

பயிற்­சி­யின்­போது பிருத்­வி­ரா­ஜுக்கு விர­லில் அடி­பட்­ட­தாம். இருப்­பி­னும் ஒரு­நாள்­கூட பயிற்­சிக்கு வரா­மல் இருந்­த­தில்­லை­யாம்.

அரக்­கோ­ணம்­தான் கதைக்­க­ளம். கார­ணம், அந்­தப் பகுதி மக்­கள் விளை­யாட்­டுக்கு அளிக்­கும் முக்­கி­யத்­து­வம்.

"அரக்­கோ­ணம் பக்­கம் பெரு­முச்சி என்ற சிறிய ஊரில் பிறந்து வளர்ந்­த­வன் நான். அரக்­கோ­ணத்­தைப் பொறுத்­த­வரை விளை­யாட்­டுப் போட்­டி­க­ளுக்கு அப்­ப­குதி மக்­கள் மிகுந்த முக்­கி­யத்­து­வம் கொடுப்­பார்­கள்.

"கைப்­பந்து, கூடைப்­பந்து, காற்­பந்து, கிரிக்­கெட் என அனைத்து விளை­யாட்­டு­க­ளி­லும் ஏரா­ள­மான, தர­மான வீரர்­கள் உரு­வா­கும் ஊர் அது. விளை­யாட்­டு­களில் சாதித்­த­தால் வேலை­வாய்ப்­பு­க­ளைப் பெற்­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை அங்கு அதி­க­மாக இருக்­கும்.

"ஒவ்­வொரு வீதி­யி­லும் கிரிக்­கெட், காற்­பந்து என பல்­வேறு அணி­கள் இருக்­கும். ஆண்டு முழு­வ­தும் ஏதா­வது போட்­டி­கள் நடந்த வண்­ணம் இருப்­ப­தால், எனது கதைக்கு அரக்­கோ­ணம் பொருத்­த­மான கதைக்­க­ள­மாக இருந்­தது," என்­கி­றார் ஜெயக்­கு­மார்.

படப்­பி­டிப்­பின்­போது அசோக் செல்­வன் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­ட­போ­தும் ஓய்­வின்றி நடித்­துள்­ளார். கதைப்­படி அவ­ரது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் ரஞ்­சித். ஒரே கிராமத்தைச் சேர்ந்த அவ­ரும் சாந்­த­னு­வும் தனித்­தனி கிரிக்­கெட் அணியை வழி­ந­டத்­து­வார்­கள். அப்­போது இரு­வ­ருமே ஒரு பிரச்­சி­னையை எதிர்­கொள்ள நேரி­டு­கிறது. அதன்பிறகு என்ன நடக்­கிறது என்­ப­து­தான் இப்­ப­டத்­தின் கதை.

"மூன்று கதா­நா­ய­கர்­க­ளுமே தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மா­ன­வர்­கள். நான் புது­மு­கம். எனி­னும் எனக்கு முழுச் சுதந்­தி­ரம் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

"கீர்த்தி பாண்­டி­யன், திவ்யா துரை­சாமி இரு­வ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். சில புது­மு­கங்­க­ளை­யும் திரை­யில் பார்க்­க­லாம்.

"இது கிரா­மத்து கிரிக்­கெட்டை விவ­ரிக்­கும் படம். இளை­யர்­களை வெகு­வா­கக் கவ­ரும். அதற்­கேற்ப காட்­சி களை அமைத்­துள்­ளோம். படத்தின் தொடக்­கம் முதல் முடிவுவரை ஒவ்­வொரு காட்­சி­யும் விறு­வி­றுப்­பா­க­வும் சுவார­சி­ய­மா­க­வும் இருக்­கும் என இப்போதே உத்தரவாதம் அளிக்கிறேன்," என்­கி­றார் இயக்கு­நர் ஜெயக்­கு­மார்.

அசோக்

செல்­வன்

, :

தமி­ழ­கத்  