பாவா: இரக்கம் இல்லாதவர் வடிவேலு

பாவா: இரக்கம் இல்லாதவர் வடிவேலு

1 mins read
40c05cb5-5ba7-48f4-ad0d-d9c9d1bad52b
-

திரை­யு­ல­கில் தனது வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக இருந்த சக கலை­ஞர்­களை வடி­வேலு அறவே கண்­டு­கொள்­வ­தில்லை என நடி­கர் பாவா லட்­சு­ம­ணன் சாடி ­உள்­ளார். ஏற்­கெ­னவே சில நகைச்­சுவை நடி­கர்­கள் வடி­வே­லுவை இதே கார­ணத்­துக்­காக வசை­பாடி உள்­ள­னர். இப்­போது பாவா லட்­சு­ம­ண­னும் அப்­பட்­டி­ய­லில் இணைந்­துள்­ளார்.

துணை நடி­கர் 'சிஸர்' மனோ­க­ரன் அண்மைய பேட்­டி­யில், வடி­வே­லு­வின் செயல்­பா­டு­க­ளைப் பார்க்­கும்­போது கோப­மாக வரு­கிறது என்­றும் அவரை சர­மா­ரி­யாக கன்­னத்­தில் அறைய வேண்டும் எனத் தோன்­று­கிறது என்­றும் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

அதே­போல் கொட்­டாச்சி, மீசை ராஜேந்­தி­ரன் உள்­ளிட்­டோ­ரும் வடி­வேலு மீது கடும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­த­னர்.

வடி­வே­லு­வு­டன் பல படங்களில் இணைந்து நடித்த நடி­கர் பாவா லட்­சு­ம­ண­னும் தனது குமு­றலை வெளிப்­ப­டுத்தி உள்­ளார்.

"கொரோனா காலத்­தில் ஊர­டங்கு கார­ண­மாக எங்­க­ளுக்கு எந்த வேலை­யும் இல்லை. அப்­போது நான் இறந்­து­விட்­ட­தா­கக்­கூட செய்தி பர­வி­யது.

"அவ்­வ­ளவு ஏன், எனக்கு கண்­ணீர் அஞ்­சலி சுவ­ரொட்­டி­யும்­கூட ஒட்­டி­விட்­டார்­கள். அதைக் கேள்­விப்­பட்டு சந்­தா­னம் என்­னைத் தொடர்புகொண்டு பேசி­னார். எனது சிரம நிலையை உணர்ந்து ஆறு­தல் கூறி­னார்.

"ஆனால் வடி­வேலு அதைக்­கூட செய்­ய­வில்லை. தொலை­பேசி­யி­லா­வது தொடர்புகொள்­வார் என எதிர்­பார்த்­தேன். அது­வும் நடக்­க­வில்லை.

"அவ­ரு­டன் பல படங்­களில் இணைந்து நடித்­த 'அல்வா' வாசு, உடல்­ந­லம் சரி­யில்­லா­மல் மது­ரை­யில்­தான் இறந்­து­போ­னார். ஆனால் மதுரையில் இருந்த வடிவேலு நேரில் சென்று அஞ்­சலி செலுத்­த­வில்லை," என்­கி­றார் பாவா லட்­சு­ம­ணன்.