திரையுலகில் எப்போதுமே நீடித்திருக்கும் பிரச்சினை என்றால் அது நடிகர், நடிகையரின் சம்பள விவகாரம்தான்.
முன்பெல்லாம் கதாநாயகர்கள் தங்களுடைய ஊதியத்தை உயர்த்திவிட்டதாக அவ்வப்போது புகார்கள் எழும். இப்போது கதாநாயகிகளும் அந்தப் பட்டியலில் இணைந்துவிட்டதாக கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் கூறுகின்றன.
"கதாநாயகிகளில் நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். கீர்த்தி சுரேஷ், திரிஷா, சமந்தா என பெரும்பாலான நாயகிகள் சம்பளத்தை அதிகரித்துள்ளனர்.
திருமணம் செய்துகொண்ட பிறகும் திரைத்துறையில் நீடிக்கும் மூத்த கதாநாயகிகளும்கூட அதிக சம்பளம் கேட்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் செய்வதறியாமல் திகைப்பில் உள்ளனர்," என்கிறார் தமிழ்த் திரையுலக மக்கள் தொடர்பாளர்களில் ஒருவர்.
கதாநாயகர்கள் ஒன்றிரண்டு வெற்றிப் படங்களில் நடித்த கையோடு கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்துவது வழக்கம்தான். ஆனால் கதாநாயகிகளும் அதே பாதையில் செல்ல என்ன காரணம்?
இந்தக் கேள்விக்குப் பெரும்பாலான மக்கள் தொடர்பாளர்கள், திரையுலகச் செய்தியாளர்கள் அளிக்கும் விளக்கம் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.
"முன்பெல்லாம் கதாநாயகர்களுக்கு உள்ள சந்தை மதிப்பை பொறுத்துத்தான் படங்களின் வியாபாரம் அமையும். அதனால் ரஜினி, கமல், விஜய் அஜீத், தனுஷ், சிம்பு என்று அந்தந்த காலகட்டங்களுக்கு ஏற்ப தொழில் போட்டி இருந்தது.
"ஆகக் கடைசியாக சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இடையே போட்டி நிலவுவதாகக் கூறப்பட்டது. அதனால் போட்டி ரீதியில் அவர்களின் படங்களுக்கான மதிப்பு தீர்மானிக்கப்பட்டது.
"இந்நிலையில் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்கள் வரத்தொடங்கியதும் நிலைமை மாறிவிட்டது. நயன்தாராதான் முதன்முதலாக இத்தகைய படங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார்.
அவர் தனி நாயகியாக நடித்த படங்களின் வசூல் நன்றாக இருப்பதாக திரையுலகில் தகவல் பரவியதும் திரிஷா, ஜோதிகா போன்ற மூத்த நாயகிகளும் அந்த வழியைப் பின்பற்றத் தொடங்கினர்.
"யார் செய்த புண்ணியமோ, ரசிகர்களின் கடைக்கண் பார்வை இந்த நாயகிகள் மீது பதிந்தது. எனவே தனிநாயகிகளின் படங்கள் வெற்றி பெறத் தொடங்கின.
"இதையெல்லாம் உற்றுக் கவனித்த கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
"இவர்கள் கேட்கும் சம்பளம் வாய்பிளக்க வைத்தாலும் சில தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் எப்பாடுபட்டாவது சம்பளத்தைக் கொடுக்க முன்வருகிறார்கள்," என்கிறார் தமிழ்த் திரையுலகின் மூத்த செய்தியாளர்களில் ஒருவர்.
தற்போது 'ஜவான்' இந்திப் படத்திலும் 'இறைவன்', 'டெஸ்ட்' உள்ளிட்ட நான்கு தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா.
இவருக்கு தமிழ், தெலுங்கிலும் வரவேற்புள்ளதாக ரூ.7 கோடியாக இருந்த சம்பளத்தை பத்து கோடி ரூபாயாக உயர்த்தி உள்ளதாகத் தகவல்.
சமந்தாவுக்கும் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் அமைகின்றன. போதாத குறைக்கு இந்தி, ஹாலிவுட் பட வாய்ப்புகளும் கிடைப்பதால், அதிகபட்சமாக இதுவரை ரூ.4 கோடி ஊதியம் கேட்ட அவர், இப்போது ஏழு விரல்களைக் காட்டுகிறாராம். அதாவது சமந்தாவின் சம்பளம் ரூ.7 கோடி.
கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெற்றி வலம் வரும் திரிஷா 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு முன்பு வரை ரூ.2 கோடி வாங்கி வந்ததாகவும் இப்போது ஒரு படத்துக்கு ரூ.4 கோடி கேட்பதாகவும் தகவல்.
இதுவரை படங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி ரூ.2 கோடி, ரூ.3 கோடி என்று சம்பளம் வாங்கிய காஜல் அகர்வால் இப்போது ரூ.4 கோடி கேட்கிறார்.
முன்பு ரூ.2 கோடி வாங்கி வந்த ரகுல் பிரீத் சிங் தற்போது ரூ.3 கோடி கேட்பதாகத் தகவல்.
கீர்த்தி சுரேஷ் ரூ.3 கோடி, ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.2 கோடி, தமன்னா ரூ.4 கோடி சம்பளம் கேட்கும் நிலையில், மூத்த நடிகையான அனுஷ்கா ரூ.5 கோடி சம்பளம் கேட்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்தச் சம்பளப் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா புயல் வேகத்தில் உயரச் சென்றுகொண்டிருக்கிறார்.
'புஷ்பா' பட வெளியீட்டுக்கு முன்பு ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி சம்பளம் பெற்று வந்த அவர், இப்போது ஆறு கோடி ரூபாய் பெறுகிறார்.
இவர்கள் அனைவரையும்விட 'சமர்த்து நாயகி' என்று பெயரெடுத்துள்ளார் சாய் பல்லவி.
வெற்றிப் படங்களில் நடித்தபிறகும்கூட ரூ.1 கோடி கொடுத்தால் போதும் என்று சொல்வதால் இந்த நல்ல பெயர் கிடைத்துள்ளது. அடுத்து நடிக்க உள்ள படத்துக்காக அவர் ரூ.2 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகத் தகவல்.
"கடந்த வாரம் குறைவான சம்பளம் கேட்ட ஒரு கதாநாயகி இப்போது இருமடங்கு சம்பளம் கேட்பதாகச் சொல்வதை நம்ப முடியவில்லையே என உங்களில் சிலர் கேட்கலாம்.
"ஆனால் அது வேறு காலம், இது வேறு காலம்," என்று சொல்லிச் சிரிக்கிறார் அந்த மூத்த செய்தியாளர்.
பூஜா ஹெக்டே உள்ளிட்ட பிற மொழி நாயகிகள் கேட்கும் சம்பளம் கிடைத்தால் மட்டுமே தமிழில் நடிக்க ஒப்புக்கொள்கின்றனர்.
மேலும், கிரித்தி ஷெட்டி உள்ளிட்ட இளம் நாயகிகளும்கூட தொடக்கத்திலேயே அதிக சம்பளம் கேட்பதாகத் தகவல்.
"அவர்களில் சிலர் படத்துக்கான விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும்கூட தனியாக தொகை கேட்பதாக ஒரு புகார் உள்ளது. எனினும் திறமைசாலிகளை மட்டுமே ரசிகர்கள் அங்கீகரிக்கின்றனர்," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
காஜல் அகர்வால்.
பூஜா ஹெக்டே.
ராஷ்மிகா மந்தனா.
சாய்
பல்லவி
, : தமிழகத்