காவ்யா: என்னைப் பற்றி ரசிகர்கள் பேச வேண்டும்

காவ்யா: என்னைப் பற்றி ரசிகர்கள் பேச வேண்டும்

3 mins read

சுபோலி விளம்­ப­ரத்­துக்கு தாம் ஆசைப்­ப­டு­வ­தில்லை என்­கி­றார் இளம் நாயகி காவ்யா தாப்­பார்.

விஜய் ஆண்­ட­னி­யின் 'பிச்­சைக்­கா­ரன் 2' படத்தின் கதா­நா­யகி. மேலும் இரண்டு தெலுங்­குப் படங்­கள், ஒரு தமிழ்ப் படத்­தில் நடித்து வரும் நாயகி.

"எல்­லா­ருக்­கும் ஒரு தாய்­மொ­ழி­தான் இருக்­கும் என்­றால் எனக்­குப் பஞ்­சாபி, இந்தி ஆகிய இரண்­டுமே தாய்­மொ­ழி­கள்­தான். சிறு வயது முதலே இவ்­வி­ரண்டு மொழி­களும் பேசக்­கூ­டிய­வர்­க­ளு­டன் பேசிப்­ப­ழ­கி­னேன். அத­னால் இந்­திப் படங்­களில் நடிக்­கும்­போது எனக்கு எந்­த­விதச் சிர­ம­மும் ஏற்­ப­டாது.

"தெலுங்­குத் திரை­யு­ல­கில் எனக்கு நல்ல கதா­பாத்­தி­ரங்­கள் அமை­கின்­றன. தொடர்ந்து நடிப்­ப­தால் தெலுங்­கும் ஓர­ள­வுப் பழ­கி­விட்­டது. தெலுங்கு ரசி­கர்­கள் எனது நடிப்பை பாராட்­டு­கி­றார்­கள்.

"தமி­ழில் இப்­போ­து­தான் வாய்ப்­பு­கள் தேடி வரு­கின்­றன. இரண்டு தமிழ்ப் படங்­களில் மட்­டுமே நடித்­துள்­ளேன். அத­னால் வச­னங்­க­ளைப் பேசு­வ­தில் சற்றே தடு­மாற நேரி­டு­கிறது. கூடிய விரை­வில் தமி­ழில் சர­ள­மா­கப் பேசக்­கற்­றுக்கொள்­வேன். அதற்­கான பயிற்­சிக்­காக தின­மும் கணி­ச­மான நேரம் ஒதுக்­கு­கி­றேன்," என்­கி­றார் காவ்யா தாப்­பார்.

கதை­க­ளைத் தேர்வு செய்­வ­தில் அவ­ச­ரம் காட்­டு­வ­தில்லை என்­றும் தமக்கு ஒத்­து­வ­ரக்­கூ­டிய கதா­பாத்­தி­ரங்­களை மட்­டுமே தேர்வு செய்­வ­தா­க­வும் சொல்­கி­றார்.

"ஆயி­ரம் கதை­கள் தேடி­வந்­தா­லும் அவற்­றுள் மன­துக்­குப் பிடித்­த­மான கதை­கள் குறை­வா­கத்­தான் இருக்­கும். கதை­யும் கதா­பாத்­தி­ர­மும் பிடித்­தி­ருந்­தா­லும், அவற்றை ஏற்­கும்­போது நூறு விழுக்­காடு அர்ப்­ப­ணிப்­பு­டன் உழைக்க முடி­யுமா என யோசிக்க வேண்­டும்.

"எனக்­கான கதா­பாத்­தி­ரத்தை மெரு­கேற்­று­வ­தில் இயக்­கு­நர் உதவி செய்­வார் என்­றா­லும் எனது தரப்­பி­லும் உண்­மை­யான உழைப்பு இருக்க வேண்­டும். எனது அர்ப்­ப­ணிப்பு இல்­லா­மல் அந்­தக் கதா­பாத்­தி­ரம் பெரிய வெற்­றி­யை­யும் பாராட்­டு­க­ளை­யும் பெற வாய்ப்பு இல்லை.

"இது­தான் எல்லை என்ற வரை­யறை ஏதும் வகுக்­கா­மல் நல்ல வேடங்­களை ஏற்­கி­றேன். ஒரு கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க ஒப்­புக்­கொண்ட பிறகு, இயக்­கு­நர் எதிர்­பார்க்­கும் நடிப்பை தயக்­க­மின்றி வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தில் தெளி­வாக உள்­ளேன்," என்­கி­றார் காவ்யா தாப்­பார்.

வித்­தி­யா­ச­மான கதை, கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க வேண்­டும் என்ற ஆசை அனைத்து இளம் நாய­கி­க­ளுக்­கும் இருக்­கும் என்­பதை ஒப்­புக்­கொள்­ப­வர், அது­போன்ற வாய்ப்­பு­க­ளுக்­கா­கப் பொறு­மை­யு­டன் காத்திருக்கப் போவ­தா­கச் சொல்­கி­றார்.

'ஏக் மினி கதா' படத்­தில் இடம்­பெற்­றுள்ள பாட­லில் காவ்­யா­வின் கவர்ச்­சித் தோற்­றம் இளை­யர்­க­ளின் தூக்­கத்தை இன்­று­வரை கெடுத்து வரு­கிறது. தொடர்ந்து அது­போன்ற வாய்ப்­பு­கள் தேடி­வந்­தா­லும் அவற்றை ஏற்­க­வில்லை என்­கி­றார்.

"அந்­தப் பாடலை மட்­டும் பார்த்­து­விட்டு என்­னைக் 'கவர்ச்­சிப் பதுமை' என்று வர்­ணிக்­கி­றார்­கள். அதில் எனக்கு விருப்­பம் இல்லை.

"சமூக ஊட­கங்­களில் அந்­தப் பாடலை ஏரா­ள­மா­னோர் பார்த்து ரசித்­துப் பகிர்ந்து வரு­வ­தா­கக் கேள்­விப்­ப­டும்­போது எனக்கே வியப்­பாக உள்­ளது. கதைக்­குத் தேவை­யான சூழல் அமைந்­த­தால் அந்­தப் பாட­லுக்­காக அதி­கம் மெனக்­கெட வேண்­டி­யி­ருந்­தது.

"தேவை­யற்ற கவர்ச்­சியை நான் விரும்­ப­வில்லை. அதே­ச­ம­யம் இளம் நடிகை என்ற வகை­யில் சமூக ஊட­கங்­களில், பொது­வெ­ளி­யில் என்­னைப் பற்றி எல்­லா­ரும் அதி­கம் பேச வேண்­டும் என விரும்­பு­கி­றேன். ரசி­கர்­க­ளின் பார்வை என் மீதும் பட­வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­வ­தில் தவ­றில்லை என நம்­பு­கி­றேன்.

"அதற்­காக எனது தரப்­பில் என்­ன­வெல்­லாம் செய்ய வேண்­டுமோ அதை நிச்­ச­யம் செய்­வேன். ரசி­கர்­கள் என்னை எப்­போ­தும் நினை­வில் வைத்­தி­ருக்க எனது நடிப்­பு­தான் முதல் நிலை­யில் கைகொ­டுக்­கும் என்று அனு­ப­வ­சா­லி­கள் கூறி­யுள்ள ஆலோ­ச­னை­களை நிச்­ச­யம் மறக்க மாட்­டேன்," என்­கி­றார் காவ்யா தாப்­பார்.

சமூக ஊட­கங்­கள் மூலம் ரசி­கர்­க­ளி­டம் தொடர்­பில் இருக்க விரும்­பி­னா­லும் இவ­ருக்கு அதற்­கான நேரம் கிடைக்­க­வில்­லை­யாம்.

நேரம் வாய்க்­கும்­போது நேரடி உரை­யா­டல்­க­ளுக்­குத் தயார் என்று சொல்­ப­வர், திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி ஐந்து ஆண்­டு­கள் ஆன போதி­லும் இது­வரை எட்டு திரைப்­ப­டங்­களில் மட்­டுமே நடித்­துள்­ளார்.

அதற்கு முன்பு இந்திக் குறும்படத்திலும் நடித்துள்ளேன்," என்கிறார் காவ்யா.

, :

தமி­ழ­கத்  