திரையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சினேகா

திரையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சினேகா

3 mins read
4fbed5fa-5cbd-4a7b-84bf-e449979f47d9
-

சினே­காவை உங்­க­ளுக்­குத் தெரிந்­தி­ருக்­க­லாம். அவர் யார் என்று கேட்­ப­வர்­க­ளுக்­காக சிறு விளக்­கம்.

வழக்­க­றி­ஞ­ரான சினேகா இந்­திய அள­வில், தமக்­குச் 'சாதி, மதம் இல்லை' என்று வெளிப்­ப­டை­யாக அறி­வித்து, அதை உறுதி செய்­வ­தற்­கான சான்­றி­தழைப் பெற்­ற­வர். இதற்­காக அவர் பத்து ஆண்டுகள் போராட வேண்­டி­யி­ருந்­தது. இப்­போது 'அவள் அப்­ப­டித்­தான் 2' என்ற திரைப்­ப­டத்­தின் மூலம் நடி­கை­யாகி உள்­ளார் சினேகா.

கடந்த 17 ஆண்­டு­க­ளாக வழக்­க­றி­ஞ­ராக தொழில்­பு­ரிந்து வரு­ப­வர், கல்­லூரி மாண­வர்­கள், சிறார்­கள், பெண்­கள் மத்­தி­யில் அர­சி­யல், சட்ட விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி வரும் சினேகா, மனி­தன் பிறக்­கும்­போது சாதி, மத­மும் உடன் வரு­வ­தில்லை என்­கி­றார்.

இவ­ரது பெற்­றோ­ரும் வழக்­கறி­ஞர்­கள்­தாம். 'எந்தச் சாதி மத­மும் சம்­ம­தம் இல்லை' என்­பதை தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு அறி­வு­றுத்தி வளர்த்­துள்­ள­னர்.

"தங்­கள் கொள்­கைப்­படி எனக்கு சினேகா என்­றும் என் தங்­கை­க­ளுக்கு மும்­தாஜ், ஜெனி­ஃபர் என்­றும் பெயர் சூட்­டி­­னர்.

இது­வ­ரை­யி­லான வாழ்க்­கை­யில் நாங்­கள் எந்தச் சாதி மதப் பண்டிகை­க­ளை­யும் கொண்­டா­டி­ய­தில்லை. மூன்று பேரை­யும் பள்­ளி­யில் சேர்க்­கும் போதே சாதி, மதம் இல்லை என்பதை தெளிவாக எடுத்துச் சொல்­லித்­தான் சேர்த்­த­னர்.

"எங்­க­ளு­டைய திரு­ம­ணத்­தை­யும் புரட்­சி­க­ர­மா­கத்­தான் நடத்­தி­னார்­கள். பெற்­றோர் வழி­யைப் பின்­பற்றி என்­னு­டைய மூன்று மகள்­க­ளுக்­கும் நானும் அப்­ப­டித்­தான் பெயர் சூட்டி உள்­ளேன்," என்­கி­றார் சினேகா.

சமூ­கம், அர­சி­யல் சார்ந்து பல தளங்­களில் இயங்கி வரும் இவருக்குப் பள்ளிப் பருவத்தி லேயே நாட­கங்­கள் மீது ஆர்­வம் அதி­க­மாம். தாமே நாட­கங்­களை எழுதி, இயக்கி நடித்­துள்­ளார்.

"தமிழ்ப் பேரா­சி­ரி­ய­ரான என் கண­வர் முனை­வர் பார்த்­தி­ப­ ராஜா­வும் ஒரு நாட­க­வி­ய­லா­ளர். தாம் பணி­யாற்­றும் திருப்­பத்­தூர் கல்­லூ­ரி­யில 'மாற்று நாடக இயக்­கம்' நிறுவி அதன் வழி நிறைய நவீன நாட­கங்­களை மேடை­யேற்றி வரு­கி­றார். "நாட­கம் தொடர்­பான 20 புத்­த­கங்­கள் உள்­பட 40 புத்­த­கங்­களை அவர் எழுதி உள்­ளார்," என்­கி­றார் சினேகா.

கண­வ­ரது ஏற்­பாட்­டில் நான்கு நாள்­கள் நடை­பெ­றும் நாடக விழா­வில், இந்­தியா முழு­வ­தி­லும் இருந்து சில நாட­கக்­கு­ழுக்­கள் பங்­கேற்­கும் என்று குறிப்­பி­டு­ப­வர், அதில் கண­வர் எழுதி, இயக்­கும் நாட­கத்­தில் தாமும் பங்­கேற்று நடிப்­பது வழக்­கம் என்­கி­றார்.

"குறைந்­த­பட்­சம் இரு­பது முறை­யா­வது அந்த நாட­கத்தை அரங்­கேற்­று­வோம். பிரான்ஸ் நாட்­டில் உள்ள அரி­ய­நா­ய­கம் ஐயா என்­னோட நாடகங்­களைத் தொடர்ந்து பார்த்து வரு­கி­றார்.

"அவள் அப்­ப­டித்­தான் 2' படத்­தின் இயக்­கு­நர் ரா.மு.சிதம்­ப­ரம், தனது படத்­துக்குக் கதா­நா­ய­கி­யைத் தேடி­ய­போது அரி­ய­நா­ய­கம் ஐயா­தான் என் பெயரை அவ­ரி­டம் குறிப்­பிட்­டுள்­ளார்.

"அதன் பிறகு ரா.மு.சிதம்­ப­ரம் என்­னைத் தொடர்பு கொண்­டது, தேடி­வந்த வாய்ப்பை நான் ஏற்­றது எல்­லாம் அடுத்­த­டுத்து நிகழ்ந்­தன. இது நல்ல அனுபவம்," என்­கி­றார் சினேகா.

, :

தமிழ­கத்  

 பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ தென்னிந்திய மொழிகளில் சுமார் இருநூறு படங்களில் நடித்துள்ளார். 'வசந்த மாளிகை' படத்தின் மூலம் புகழின் உச்சியைத் தொட்ட அவருக்கு 74 வயதாகிறது. இந்நிலையில்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காந்தி தகவல் தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகம் வாணிஸ்ரீக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி உள்ளது.

 நாட்டுப்புறப் பாடகர் அந்தோணிதாசன் இதற்கு முன்பு திரைப்படங்களில் சிறு வேடங்களில் தலைகாட்டி உள்ளார். இப்போது முதன் முறையாக 'தல போச்சே' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதுதவிர 'இடி முழக்கம்', 'வைரி' ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருவதாகச் சொல்கிறார் அந்தோணி தாசன்.