'பிழைப்பைக் கெடுக்கிறார்கள்'

3 mins read

நடி­கர்­கள் தனுஷ், சிவ­கார்த்­தி­கே­யன் ஆகிய இரு­வ­ருக்­கும் தமிழ்த் திரை­யு­ல­கப் பாட­லா­சி­ரி­யர்­கள் மத்­தி­யில் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பாடல்­கள் எழு­து­வது கதா­நா­ய­கர்­க­ளுக்­குத் தேவை இல்­லாத வேலை என்ற விமர்­ச­ன­மும் எழுந்­துள்­ளது.

இப்­போ­தெல்­லாம் தமிழ்த் திரை­யு­ல­கில் யார், எப்­போது, என்ன மாதி­ரி­யான பணி­க­ளை மேற்­கொள்­வார்­கள் என யூகிக்க முடி­ய­வில்லை.

நடி­கர்­கள் இயக்­கு­நர்­க­ளா­க­வும் இசை­ய­மைப்­பா­ளர்­கள் கதா­நா­ய­கர்­க­ளா­க­வும் மாறு­கின்­ற­னர். சொந்­தப் படம் தயா­ரிக்­கும் திரைக்­க­லை­ஞர்­க­ளின் எண்­ணிக்கை கூடி­யுள்­ளது.

அந்த வகை­யில் முன்­னணி கதா­நா­ய­கர்­க­ளாக உள்ள தனுஷ், சிவ­கார்த்­தி­கே­யன் இரு­வ­ரும் பாட­லா­சி­ரி­யர்­க­ளா­க­வும் செயல்­ப­டு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் இரு­வ­ருக்­கும் பாட­லா­சி­ரி­யர்­கள் மத்­தி­யில் மறை­முக எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது. இரு­வ­ரும் தங்­க­ளு­டைய பணி­யில் குறுக்­கிடு­வ­தா­க­வும் தங்­கள் பிழைப்பு பாதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் பாட­லா­சி­ரி­யர்­கள் சிலர் புலம்­பு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

ஒரு காலத்­தில் தமிழ்த் திரை­யு­ல­கின் சூப்­பர் ஸ்டார் என்ற மதிப்­பு­டன் வலம் வந்த தியா­க­ராஜ பாக­வ­தர் உள்­ளிட்ட நடி­கர்­கள் தங்­கள் படத்­துக்கு நடித்­துக்­கொண்டே பாடல்­களை எழுதி, அவற்­றைப் பாட­வும் செய்­த­னர்.

"அவர்­க­ளது பாடல்­களில் அர்த்­த­மும் அழ­கி­ய­லும் இருந்­தது. ஆனால் இன்று நிலைமை மாறி உள்­ளது. நல்ல மெட்­டுக்­கும் தமி­ழுக்­கா­க­வும் இல்­லா­மல் வெறும் சத்­தத்­துக்­காக பாடல்­கள் எழு­தப்­ப­டு­கின்­றன. இது ரசி­கர்­களுக்­குப் பிடிக்­க­வில்லை," எனத் தமி­ழக ஊட­கத்­தில் வெளி­வந்­துள்ள ஓர் அல­சல் கட்­டு­ரை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், கோடிக்­க­ணக்­கில் சம்­பா­திக்­கும் முன்­னணி நடி­கர்­கள் தங்­க­ளு­டைய நடிப்பை மெரு­கேற்­று­வ­தில் கவ­னம் செலுத்­த­லாம் என்­றும் பாடல்­கள் எழு­து­வது தேவை­யற்ற வேலை என்­றும் சொல்­கி­றார் கோடம்­பாக்­கத்­தின் மூத்த செய்­தி­யா­ள­ரான ஆர்.எஸ்.அந்­த­ணன்.

"ஒரு காலத்­தில் கவி­ஞர் வைர­முத்து தனது பாடல்­களில் ஆம்­பல், மௌவல் என்­பன போன்ற வார்த்­தை­க­ளைப் பயன்­படுத்­தி­னார். உடனே ரசி­கர்­கள் அவற்­றுக்கு என்ன அர்த்­தம் என்ற விளக்­கத்தை தேடி­னார்­கள். ஆனால் கதா­நா­ய­கர்­களும் மற்­ற­வர்­களும் பாடல் என்ற பெய­ரில் எழு­தும் வரி­க­ளுக்கு எந்­த­வித அர்த்­த­மும் இல்லை. இத­னால் தமிழ் சினி­மா­வில் பாடல்­க­ளின் தரம் குறைந்­து­கொண்டே போகிறது," என்று கவ­லையை வெளிப்­ப­டுத்தி உள்­ளார் திரு அந்­த­ணன்.

கமல்­ஹா­சன், விஜய், தனுஷ், சிம்பு உள்­ளிட்ட நடி­கர்­கள் தங்­க­ளு­டைய படங்­களில் பாட­வும் செய்­கின்­ற­னர். சூர்­யா­வும் இவ்­வாறு முயற்சி செய்­தார். பிறகு ஒத்­து­வ­ராது எனப் பாடு­வதை நிறுத்­தி­விட்­டார்.

திரை­யில் பாட விரும்­பும் நடி­கர்­கள் நாள்­க­ளின் போக்­கில் தங்­க­ளு­டைய திற­மையை வளர்த்­துக் கொண்­டுள்­ள­னர். ஆனால், பாடல்­களை எழுத விரும்­பும் கலை­ஞர்­கள், அதற்­கான தகு­தியை வளர்த்­துக்­கொள்­ள­வில்லை என்­கி­றார்கள் விமர்­ச­கர்­கள்.

தனுஷ் தாம் நடித்த '3' படத்­துக்­காக எழு­திப்­பா­டிய 'ஒய் திஸ் கொல­வெறி' பாடல் உல­கெங்­கி­லும் பலத்த வர­வேற்­பைப் பெற்­றது. எனி­னும் அப்­பா­ட­லில் இடம்­பெற்ற வரி­க­ளுக்­காக அவர் அதி­கம் மெனக்­கெ­ட­வில்லை. அதன் பிற­கும் அதே­போன்ற பாடல்­களைத்­தான் எழுதி வரு­கி­றார் தனுஷ்.

அவர் போட்ட பாதை­யில்­தான் இப்­போது சிவ­கார்த்­தி­கே­ய­னும் நடை­போ­டு­கி­றார். தனுஷ் எழு­திய பாடல்­களில் ஒன்­றி­ரண்­டா­வது தர­மாக இருந்­தன. ஆனால் சிவ­கார்த்­தி­கே­யன் பயன்­ப­டுத்­தும் சில வார்த்­தை­களுக்­கான அர்த்­தம் அவ­ருக்கே தெரி­யாது என்­ப­து­தான் உண்மை.

அண்­மை­யில், 'பீஸ்ட்' படத்­தில் அவர் எழு­திய பாடலை இதற்கு உதா­ர­ண­மா­கக் குறிப்­பி­ட­லாம். இப்­போது 'ஜெயி­லர்' படத்­தி­லும் பாடல் எழு­தி­யுள்­ளார் சிவா.

எனி­னும் இதன் மூலம் நல்ல விஷ­யம் நடக்­கிறது. அதா­வது, பாடல்­கள் எழு­திச் சம்­பா­திக்­கும் தொகையை அவர் மறைந்த பாட­லா­சி­ரி­யர் நா. முத்­துக்­கு­மா­ரின் மகன் ஆத­வன், மகள் மகா­லட்­சுமி ஆகி­யோ­ரின் பெய­ரில் வங்­கி­யில் வைப்­புத்­தொ­கை­யா­கச் செலுத்தி வரு­கி­றார்.

இதற்­குப் பல­ரும் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர் என்­றா­லும் கதா­நா­ய­கர்­கள் பாடல் எழு­து­வ­தால் தங்­க­ளு­டைய வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­ப­டு­கிறது என்று பாட­லா­சி­ரி­யர்­கள் தரப்­பில் முணு­மு­ணுப்பு நில­வு­கிறது.

ஆர்.எஸ்.அந்­த­ண­னும் இதைச் சுட்­டிக்­காட்­டு­கி­றார்.

"முழு நேரப் பாட­லா­சி­ரி­யர் ஒரு­வ­ரி­டம் நான் பேசிக்­கொண்­டி­ருந்­தேன். அப்­போது அவர், 'சார் எங்­க­ளுக்கு பாட்டு எழு­து­வ­து­தான் தொழில். இசை­ய­மைக்­கவோ, நடிக்­கவோ போக முடி­யாது. ஆனால் இசை­ய­மைப்­பா­ளர்­களும் நடி­கர்­களும் பாடல்­கள் எழு­தத் தொடங்­கி­விட்­ட­னர். ஆனால் அவர்­க­ளுக்கு இதுவா தொழில்?

"இது எந்த விதத்­தில் நியா­யம் என்று தெரி­ய­வில்லை' என்று புலம்­பி­னார். அவர் சொல்­வ­தில் ஒரு நியா­யம் இருக்­கத்தான் செய்கிறது," என்­கி­றார் மூத்த செய்­தி­யா­ளர் திரு ஆர்.எஸ்.அந்­த­ணன்.