தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரைத்துளிகள்

2 mins read
b2808182-5805-4a07-ab59-149e7b01d915
-
multi-img1 of 3

 கன்னடத் திரைப்பட நடிகையான ராதிகா ப்ரீத்தி, தமிழ் சின்னத்திரையில் 'பூவே உனக்காக' நாடகத் தொடர் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குச் சென்று முன்னணி நாயகிகளாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர், வாணி போஜன் வரிசையில் ராதிகா ப்ரீத்தியும் இடம்பெறவேண்டுமென ரசிகர்கள் வாழ்த்துகள் கூறிவருகின்றனர்.

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருந்தார். இப்படம் பெரிய வெற்றிபெற்று வசூலில் சாதனை படைத்தது. தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரது 233வது படமாகும். இந்தப் படத்திலும் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறாராம். அவரை மனதில் வைத்து வில்லன் பாத்திரத்தை வடிவமைக்குமாறு வினோத்தை கமல் கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விஜய்சேதுபதியிடம் முதல்கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி கால்ஷீட் தேதி, சம்பளம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 லஹரி இசை நிறுவனம் சார்பில் 'நீ போதும்' என்கிற இசை ஆல்பம் உருவாகி உள்ளது. இந்த ஆல்பம் வெளியீட்டு விழாவில் நடிகை மீனா பேசியபோது, "இப்பாடலை வெளியிடும் அளவுக்கு நான் சரியான ஆளா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இதை வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. புதியவர்களின் வருகையை எப்போதும் ஊக்குவிக்க நான் தயங்கியதே இல்லை. அதில் சொல்லமுடியாத ஒரு சந்தோசம், திருப்தி கிடைக்கிறது. பல வருடங்களுக்கு முன் நானும் விக்ரமும் 'காதலிசம்' என்கிற ஆல்பத்தில் இணைந்து நடித்தோம். அச்சூழலில் ஆங்கிலம், இந்தி ஆல்பங்கள் வரவேற்பை பெற்று வந்தாலும் தமிழில் எங்கள் ஆல்பத்தை வெளியிட முடியாமலேயே போய்விட்டது. எனினும், என்னால் செய்ய முடியாததை இன்னொருத்தர் செய்யும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார் மீனா.