'பிச்சைக்காரன் 2' திரைப்படம் மே 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகி உள்ள இப்படம் நாளை 18ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான 'ஃபர்ஹானா' திரைப்படம் மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளி யான நிலையில், நேற்று (ஜூன் 16) இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதேபோல், சாந்தனு நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான 'இராவண கோட்டம்' திரைப்படமும் (படம்) நேற்று (ஜூன் 16) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளதாக திரைச் செய்தி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.