அமீரின் 'உயிர் தமிழுக்கு' இம்மாத இறுதியில் வெளியீடு

அமீரின் 'உயிர் தமிழுக்கு' இம்மாத இறுதியில் வெளியீடு

1 mins read
f932d8e7-fa3d-45e3-b92b-1e6b7a2a1e40
-

ஆதம்பாவா தயாரித்து இயக்கி உள்ள திரைப்படம் 'உயிர் தமிழுக்கு'. இதில் இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். சாந்தினி ஸ்ரீதரன் நாயகியாக நடிக்க, ஆனந்த் ராஜ், மகாநதி சங்கர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சரவணசக்தி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர். வித்தியாசாகர் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இம்மாத இறுதியில் படம் வெளியாகும் எனத் தகவல். இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.