இயக்குநர் பார்த்திபனின் அடுத்த படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்துள்ளார்.
கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே அவர் இவ்வாறு கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. பார்த்திபன் இயக்கி நடித்திருந்த 'இரவின் நிழல்' படத்துக்கு ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
அப்படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்து 'டீன்' என்ற புதுப் படத்தை இயக்க உள்ளார் பார்த்திபன்.
13 முதல் 15 வயதுடைய சிறார்களின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படம் உருவாகும் எனத் தெரிகிறது.
இதற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என அண்மையில் அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடும் வேலைப்பளு காரணமாக தம்மால் 'டீன்' படத்துக்கு இசையமைக்க இயலாது என ரஹ்மான் தெரிவித்துள்ளார். எனினும், பார்த்திபனின் படம் வெற்றிபெற அவரிடம் தமது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

