திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
5b513b78-57a9-4503-8ad7-f8ea207bc433
-
multi-img1 of 3
Google News Preferred Icon

 முதன்முறையாகத் தனி இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் நடிகை ஆண்ட்ரியா.

கோவையில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் இளையராஜா, ரகுமான் உள்ளிட்ட இசையமைப்பாளர் களின் இசையில், தாம் பாடி வெற்றி பெற்ற பாடல்களைப் பாட உள்ளதாகத் தெரி வித்துள்ளார். "வாழ்க்கையில் எதுவும் எளிதில் கைகூடி விடாது. அனைத்திலும் ஒருவித சிரமம் இருக்கும். கடந்த 15 ஆண்டுகளாக இசையைப் பயின்று வருகிறேன். அதுதான் இப்போது என்னைப் பாட வைக்கிறது," என்கிறார்.

கடந்த மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்ட்ரியா, தொடர்ந்து வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்வு களில் கலந்துகொள்ள

ஆர்வம் காட்டி வருகிறார்.

 இந்தி, ஹாலிவுட் திரைப்பட வாய்ப்புகளுக்காக தாம் கவர்ச்சியாக நடிப்பதாக வெளிவந்துள்ள தகவல்களை மறுக்கிறார் தமன்னா.

'ஜீ கர்தா' என்ற இணையத் தொடரில் இவர் தேவையின்றி மிகக் கவர்ச்சியாக நடித்துள்ள தாக ரசிகர்கள் விமர்சித்துள்ள னர். இதேபோல் 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' என்ற தொடரி லும் ஆபாசமாக நடித்திருப்ப தாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், ஹாலிவுட் படங் களில் நடிக்கவேண்டும் என்பதற்காக ஆபாசக் காட்சிகளில் நடிக்கவில்லை என தமன்னா விளக்கம் அளித்துள்ளார். "கதைக்கு தேவை என்பதால் சற்று கவர்ச்சியாக நடித்தேன்.

அதில் ஆபாசம் தெரியாது," என்கிறார் தமன்னா.

 சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள புதிய படம் 'தலைநகரம் 2'. இப்படம் எதிர்வரும் 25ஆம் தேதி வெளியாகிறது.

 தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு அவரது பிறந்த நாளான ஜூலை 28ஆம்

தேதி வெளியாகிறது.

 கபடி விளையாட்டை மையப்படுத்தி தமிழில் பல படங்கள் வெளிவந்துள்ளன. அப்பட்டியலில் சதீஷ் ஜெய ராமன் இயக்கியுள்ள 'கபடி ப்ரோ' படமும் இடம்பெறுகிறது. "சின்னச் சின்ன ஏமாற்று வேலைகளைச் செய்து பிழைத்து வரும் கபடி வீரர் வீரபாகு வுக்கு அவனது இரு நண்பர் கள் பக்கபலமாக உள்ளனர். மூவருமாகச் சேர்ந்து 'பாயும் புலி' எனும் கபடி அணியைத் தொடங்கி அந்தப் பகுதியின் சாம்பியன்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில் வீரபாகுவும் காவல்துறை அதிகாரியின் மகள் அபிராமியும் காதல் வயப்பட நாயகனுக்குப் பிரச்சினைகள் தொடங்கு கின்றன. இறுதியாக, கபடிப் போட்டியிலும் காதலிலும் வீரபாகு வென்றானா என்பதே கதை," என்கிறார் சதீஷ் ஜெயராமன்.