முடிவுக்கு வந்த பட வழக்கு

முடிவுக்கு வந்த பட வழக்கு

1 mins read
7d200a72-09d3-407d-8f38-6020da6029ad
-

சங்­கர் இயக்­கிய 'எந்திரன்' படத்­தின் கதை தொடர்­பாக இருந்த சர்ச்சை முடிவுக்கு வந்­துள்­ளது.

எழுத்­தா­ளர் ஆரூர் தமிழ்­நா­டன் அந்­தக் கதை தாம் எழு­தி­யது எனக் குறிப்­பிட்டு நீதி­மன்­றத்தை அணு­கி­னார். இதை இயக்­கு­நர் சங்­கர் தரப்பு மறுத்­தது.

பல ஆண்­டு­க­ளாக நீடித்து வந்த வழக்கு விசா­ர­ணை­யின் முடி­வில் தற்­போது தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

மனு­தா­ர­ரின் கதைக்­கும் 'எந்­தி­ரன்' படத்­தின் கதைக்­கும் அதிக வேறு­பா­டு­கள் இருப்­ப­தா­கக் கூறி ஆரூர் தமிழ்­நா­டன் தாக்­கல் செய்த மனு­வைத் தள்­ளு­படி செய்து நீதி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளார்.

வழக்கின் செலவை மனுதாரர் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.