உண்மையான காதலில் பொய்களுக்கு இடமில்லை என்கிறார் ரகுல் பிரீத் சிங்.
காதலைவிட காதலர்களாக மாறுவதற்கு முன்பு நண்பர்களாக இருக்கும் உறவை தாம் மிகவும் நேசிப்பதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருசிலர் காதல் என்ற உறவை தவறாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் ரகுல்.
தமிழில் கமலுடன் ‘இந்தியன் -2’ திரைப்படத்தில் நடித்து வரும் ரகுல், இந்தி நடிகர்கள் பூமி பெட்னேகர்,, அர்ஜுன் கபூர் ஆகியோருடன் அடுத்தடுத்த பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தெலுங்கிலும் புதுப்படம் ஒன்றில் அவர் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல்.
“காதலின் மிகப்பெரிய எதிரி என்றால் அது நாம் சொல்லும் பொய்கள்தான். ஒரு நெருக்கமான உறவில் மறைப்பதற்கும் பொய் சொல்வதற்கும் இடமில்லை. பேச முடியாத விஷயம் என்று எதுவுமில்லை.
“நண்பர்களாக இருக்கும்போது உறவில் என்னவேண்டுமானாலும் பேசலாம். அதில் மறைப்பதற்கும், பொய் சொல்வதற்கும் தயக்கமிருக்காது. தவறு செய்தாலும் அதை மறைக்காமல் மனம் விட்டுப் பேசலாம்,” என்கிறார் ரகுல் பிரீத் சிங்.
நல்ல மனிதர்களும்கூட தவறு செய்வது இயல்பு என்று குறிப்பிட்டுள்ள அவர், செய்த தவற்றை வெளிப்படையாகச் சொல்லாமல் அதை மறைப்பதுதான் காதலில் இருக்கும் பெரிய பிரச்னை என்று கூறியுள்ளார். காதலில் பொய் சொல்வதையும் உணர்வுபூர்வமாகப் பேசி ஏமற்றுவதையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் ரகுல்.
“இன்று காதலைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எதை எதையோ காதல் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“நீங்கள் ஒருவரைக் காதலிக்கிறீர்கள் என்றால் உங்களின் அன்புக்குரியவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்வதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும்.
“ஆனால், இங்கு பலர் தாங்கள் காதல் செய்யும் ஒருவரை வளர விடாமல் ‘எனக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் நீ செய்ய வேண்டும்’ எனக் கட்டாயப்படுத்துகிறார்கள்.
“உங்களை மகிழ்ச்சியாக, மேலும் மேலும் வளர்ச்சியடைய வைப்பதுதான் உண்மையானக் காதலாக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்கிறார் ரகுல் பிரீத் சிங்.
இதனிடையே, ரகுலுக்கும் அவரது காதலருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இருவரும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை. ரகுல் சொந்தப் படம் எடுக்க விரும்பியதாகவும் அதற்கு அவரது காதலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ரகுல் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம்.
இதனிடையே, இந்தியன் படத்தில் ரகுல் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில், காதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.
இதற்கிடையே, தந்தையர் தினத்தையொட்டி பேட்டியளித்த அவர், தமது தந்தையிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருள்களை மறக்கவே இயலாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தந்தை எனக்கு அளித்த பரிசுப்பொருள்களில் ஆகச் சிறந்தவை என்றால் அவரது நற்பண்புகள்தாம். அவற்றுக்கு ஈடில்லை,” என்கிறார் ரகுல் பிரீத் சிங்.


