தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செந்தில்: ‘கரகாட்டக்காரன் 2’ படத்தில் நான் நடிப்பது உறுதி

1 mins read
3d3e48c5-b230-4c4c-9ae7-7d2803ba5bae
செந்தில் - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட வெற்றிப் படைப்புகளில் ‘கரகாட்டக்காரன்’ படத்துக்கும் நிச்சயம் இடமுண்டு. இயக்குநர் கங்கை அமரன் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் நடிக்க தாம் தயாராக இருப்பதாகச் சொல்கிறார் நடிகர் செந்தில்.

“இந்தப் படத்தில் யார், யார் நடிக்கப் போகிறார்கள் என்பது தெரியாது. கங்கை அமரன் என்னிடமும் பேசினார். இப்படத்தில் கண்டிப்பாக நான் இருப்பேன் என்றேன்.

“வேறு யாராவது நடிக்க முன்வரவில்லை என்றால் கவலைப்பட ஒன்றுமில்லை. நான் கோபத்துடன் பேசுவதாகத் தோன்றலாம். அதற்கான காரணத்தைப் பிறகு சொல்கிறேன்,” என்கிறார் செந்தில்.

அவர் யாரைப் பற்றி இவ்வாறு கோபமாகப் பேசுகிறார் என்பது தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி